கொரோனா வைரஸ் நோய் தொற்றால் கடந்த 24 மணிநேரத்தில் 642 பேருக்கு பரவி உள்ளதால், இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,155 உயர்ந்து உள்ளது.
ஆட்டத்தை ஆரம்பித்தது "கொரோனா"..! பாகிஸ்தானில் 75% சமூக பரவல் மூலம் நோய்த்தொற்று..! அச்சத்தில் மக்கள்!
பாகிஸ்தானில் 75% சமுக பரவல்
உலகத்தின் 210 நாடுகளுக்கும் மேலாக பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ள கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது பாகிஸ்தானிலும் பரவ தொடங்கி உள்ளது. பாகிஸதானில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,155 ஆக உள்ளது.
கொரோனா வைரஸ் நோய் தொற்றால் கடந்த 24 மணிநேரத்தில் 642 பேருக்கு பரவி உள்ளதால், இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,155 உயர்ந்து உள்ளது. இதுவரை 237 பேர் உயிரிழந்து உள்ளனர்.நேற்று ஒரே நாளில் 13 பேர் இறந்தனர். அதே வேளையில் 2,527 பேர் குணமடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
தற்போது மெல்ல மெல்ல அதிகரித்து வரும் கரோனா வைரஸ் தாக்கம் பாகிஸ்தானில் மே மற்றும் ஜூன் மாதத்தில் அதிகமாக இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர். தற்போது பாகிஸ்தானில் பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்கள் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதித்து உள்ளது. கொரோனா பரவல் தடுக்க அந்நாட்டு பிரதமர் அதிரடி நடவடிக்கையில் இறங்கி இருந்தாலும், தற்போது வரை 75% பாதிப்பு சமூகப் பரவல் மூலமாகவே நோய் தோற்று ஏற்பட்டு உள்ளது என தெரிவிக்கப் பட்டு உள்ளது
உலக அளவில் கொரோனா நோய் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்குகிறது. பாதிக்கப்பட்டவர்கள் 27,25,920 நபர்கள், அதே வேளையில் 7 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் நலமுடன் வீடு திரும்பி உள்ளனர். இந்த ஒரு நிலையில், மெல்ல மெல்ல அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்றால் பாகிஸ்தானிய மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்