சைலண்டா சேவையில் இறங்கிய "சேவா பாரதி அமைப்பு"! மக்களுக்கு பல லட்சம் மாஸ்க்..உணவு பொருட்கள் வழங்கி அசத்தல்..!

By ezhil mozhiFirst Published Apr 21, 2020, 8:09 PM IST
Highlights

ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்குவது, வறுமையில் வாடும் குடும்பத்தினருக்கு உணவு பொருட்கள் வழங்கல், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை சேவா பாரதி அமைப்பு செய்து வருகிறது.

சைலண்டா சேவையில் இறங்கிய "சேவா பாரதி அமைப்பு"! ஓடோடி வந்து மக்களுக்கு பல லட்சம் மாஸ்க்..உணவு பொருட்கள் வழங்கல்!

கொரோனாவிற்கு எதிரான புரட்சியில் சேவா பாரதி அமைப்பு, தென் தமிழகத்தில் சிறிய அளவில் இயங்கினாலும் மிக முக்கிய பங்காற்றி வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சேவா பாரதி அமைப்பு, ஜன் சக்தி டிரஸ்ட் உடன் இணைந்து "சக்தி தொழில் மையம்" நடத்தி வருகிறது. இதில் 20 தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து, ஆர்வமுள்ள தையல் தெரிந்த பெண்கள் மற்றும் மற்ற 500 உதவியாளர்கள் கொண்டு தினமும் மாஸ்க் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

அரசு உதவியுடன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் முத்ரா லோன் திட்டத்தில் வங்கிக்கடன் பெற்று, 20  தையல் மெஷின் பெறப்பட்டு மாஸ்க் தயாரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதன் மூலம் ஒரு நாளைக்கு  குறைந்தது 5 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை முகக்கவசம் தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகித்து வருகிறது.இந்த சேவையால், வறுமையில் இருக்கும் பெண்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைந்து வருவதுடன் சுயமாக தொழில் செய்யும் வாய்ப்பையும் பெற்று உள்ளனர்.

கொரோனா தாக்கம் இந்தியாவில் அதிகரிக்க தொடங்கிய நிலையில்,கடந்த 15 நாட்களாக 5 லட்சம் மாஸ்குகளை தயாரித்து பரிவார் மற்றும் கல்மலை சேவா சமிதி உறுப்பினர்கள் மூலமாக மக்களுக்கு வழங்கி வருகிறது. மேலும் 10 லட்சம் மாஸ்குகளை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். 


 
கொரோனா பரவலை தடுக்க மக்களுக்காக தன்னலமற்று வேலை செய்து வரும் ஆயிரக்கணக்கான தூய்மை பணியாளர்கள் மற்றும் கொரோனாவுக்கு எதிராக போராடும் மற்ற ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்காதவாறு அவர்களுக்கு தேவையான முகக்கவசத்தை தொடர்ந்து அளித்து வருகிறது சேவா பாரதி அமைப்பு.

இது தவிர்த்து, ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்குவது, வறுமையில் வாடும் குடும்பத்தினருக்கு உணவு பொருட்கள் வழங்கல், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை சேவா பாரதி அமைப்பு செய்து வருகிறது.

இந்த சிறந்த சேவையால், வறுமையில் இருக்கும் பெண்கள் வேலை பெற்று அவர்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதுடன், தன்னலமற்று மக்களுக்கும் சிறந்த சேவையாற்றி வரும் தூய்மைப்பணியாளர்களையும் பாதுகாக்குகிறது. இவர்களது சேவைக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!