SCS Scheme : மூத்த குடிமக்களுக்கான அரசாங்க முதலீட்டு திட்டம் - எப்படி சேர்வது? இதனால் கிடைக்கும் பலன்கள் என்ன?

By Ansgar R  |  First Published Feb 22, 2024, 7:33 PM IST

Senior Citizen Saving Scheme : மூத்த குடிமக்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டமாக திகழ்ந்து வருகின்றது SCS என்ற திட்டம். இதன்முலம் எப்படி பயனடையலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.


மனிதர்கள் அனைவருக்கும் பணத்தினுடைய தேவை என்பது எப்பொழுதும் இருந்து கொண்டே தான் இருக்கும். ஆனால் காலம் செல்ல செல்ல நமது உழைக்கும் திறனானது குறைந்து கொண்டே இருக்கும். ஆகையால் முதுமை காலத்தில் தேவைப்படும் பணத்தை, நம் இளம் வயதிலேயே ஈட்டுவது தான் மிகவும் நல்லது. 

அரசு அங்கீகாரம் பெற்ற இடங்களில் நமக்கு கிடைக்கும் சிறு தொகையை சேமித்து வைத்தால், நிச்சயம் நம்முடைய முதுமை காலத்தில் அது நமக்கு பெரிய அளவில் கை கொடுக்கும். அந்த வகையில் மூத்த குடிமக்கள் தங்களிடம் இருக்கும் பணத்தை பாதுகாப்பாக சேர்த்து வைத்து, அதன் மூலம் வருவாய் ஈட்டும் ஒரு திட்டத்தை குறித்து இப்பொழுது பார்க்கலாம்.

Latest Videos

undefined

பெண்கள் ரூ.1 லட்சம் வரை சம்பாதிக்கலாம்.. லக்பதி தீதி திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது..? முழு விவரம்

முதுமக்கள் சேமிப்பு திட்டம் (Senior Citizen Saving Scheme)

இந்த திட்டத்தில் சேர உங்கள் வீட்டுக்கு அருகே இருக்கின்ற தபால் நிலையத்தை அணுகினாலே போதும். இந்த சீனியர் சிட்டிசன் சேவிங் ஸ்கீம் என்ற திட்டத்தில் உங்களுக்கு சேர வாய்ப்பு கிடைக்கும். இது அஞ்சலகத்தில் வைக்கப்படும் சிறுசேமிப்பு திட்டங்களின் கீழ் வருகிறது. 60 வயதுக்கு மேல் உள்ள அனைவரும் இந்த திட்டத்தின் மூலம் முதலீடு செய்து பயன்பெறலாம். 

அது மட்டுமல்லாமல் "வாலண்டரி ரிட்டயர்மென்ட்" என்று அழைக்கப்படும் விருப்ப ஓய்வு திட்டத்தின் கீழ் 55 வயதுக்கு உட்பட்ட, மற்றும் 60 வயதுக்கு உட்பட்ட ஓய்வு பெற்ற நபர்களும் இந்த SCSS மூலம் கணக்குகளை தபால் நிலையங்களில் திறந்து பயனடைய முடியும். இது மட்டுமில்லாமல் பாதுகாப்பு சேவைகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்கள் அனைவரும் தங்களுடைய 50 வயதுக்கு மேலே இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம்.

இந்த திட்டத்தில் சேர குறைந்தபட்ச முதலீடாக ஆயிரம் ரூபாய் முதல், அதிகபட்சமாக 30 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இதில் முதலில் ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே கணக்கு துவங்கப்படுகிறது, அதன்பிறகு மூன்று ஆண்டுகளுக்கு இதை நீட்டிக்க முடியும். மூத்த குடிமக்கள் இந்த சேமிப்பு திட்டத்தில் சேர்வதால் வருமான வரி சட்டத்தின் பிரிவு 80C-ன் கீழ் பல பலன்கள் கிடைக்கும். இதன் மூலம் சுமார் 1.5 லட்சம் ரூபாய் வரி விளக்கும் பெற்றுக் கொள்ளலாம்

இந்த திட்டத்தின் கணக்கீட்டு முறை

மொத்த வைப்புத் தொகை - 5 லட்சம் ரூபாய் 
திட்டத்தின் கால அளவு - 5 ஆண்டுகள் 
வட்டி விகிதம் - 8.2 சதவிகிதம் 
முதிர்வு தொகை 7,05,000 ரூபாய் 
காலாண்டு வருமானம் - 10,250 ரூபாய்

அடிக்கடி கிரெடிட் கார்டு பயன்படுத்துறீங்களா? அதனால் பல லாபங்கள் இருக்காம் - Top 5 Benefits ஒரு பார்வை!

click me!