ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் ருசியான 'மீன் பிரியாணி'.. இதோ ரெசிபி..!!

By Kalai Selvi  |  First Published Feb 22, 2024, 1:47 PM IST

ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் ருசியான 'மீன் பிரியாணி' எப்படி செய்வது என்று பார்க்கலாம்.


உணவு என்றாலே, அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் குறிப்பாக பிரியாணி, அசைவு பிரியர்களுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று என்றே சொல்லலாம். குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் பலர் காலை, மதியம், இரவு என மூன்று வேலையும் பிரியாணி கொடுத்தாலும் சலிக்காமல் சாப்பிடுவார்கள். 

பொதுவாகவே, பிரியாணியில் மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி என பல வகைகள் உண்டு. அவற்றில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான ருசியில் இருக்கும். அந்த வகையில்,  கடல் உணவு பிரியர்கள் அதிகம் விரும்பி சாப்பிடுவது, மீன். எனவே, இந்த பின்னணியில், ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் வீட்டிலேயே மீனை வைத்து சுவையான பிரியாணி செய்யலாம். சரி வாங்க இப்போது கடல் பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் ருசியான 'மீன் பிரியாணி' எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Latest Videos

இதையும் படிங்க:   இறால் தொக்கு இப்படி செஞ்சு கொடுங்க.. இன்னும் வேணும்னு சொல்லுவாங்க!!

தேவையான பொருட்கள்:
மீன் - 1 கிலோ (முள் இல்லாதது)
பாஸ்மதி அரிசி - 2 கப்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 3 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3
பிரியாணி மசாலா - 1 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
கரம் மசாலா - 1 ஸ்பூன்
பெரும்சீரகம் - 1 ஸ்பூன்
கிராம்பு - 4
மிளகு - 4
ஏலக்காய் - 4
தயிர் - 1 கப்
பிரியாணி இலை - 3
இலவங்கப்பட்டை - 1 துண்டு
கொத்தமல்லி தூள் - 1 ஸ்பூன்
வத்தல் பொடி - 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை ஸ்பூன்
நெய் - 2 ஸ்பூன்
எண்ணெய் - 1 ஸ்பூன்
தேங்காய் பால் - கால் கப்
புதினா, கொத்தமல்லி இலை, உப்பு, தண்ணீர் - தேவையான அளவு

இதையும் படிங்க:   சுவையான முட்டை மஞ்சூரியன் இனி நீங்களும் வீட்ல செய்யலாம்.. ரெசிபி இதோ!

மீன் பிரியாணி செய்வது எப்படி?
முதலில் மீன் துண்டுகளை எடுத்து சுத்தமாக கழுவி தனியாக வைக்கவும். பிறகு பாசுமதி அரிசியை நன்கு கழுவி தண்ணீரில் ஊறவைக்கவும்.

இப்போது கேஸ் அடுப்பை பற்ற வைத்து அதன் மீது ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நெய் மற்றும் எண்ணெய் சேர்க்க வேண்டும். பின் அதில் பிரியாணி இலை, பட்டை ஏலக்காய், கிராம்பு, பெருஞ்சீரகம் சேர்க்கவும். அதன்பிறகு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுதுகள் சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போனவுடன், அதில் தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு, மல்லித் தூள், மஞ்சள்தூள், வத்தல் பொடி, சிறிதளவு உப்பு, கரம் மசாலா தூள், தயிர் சேர்த்து வதக்கவும்.

பின்னர், அதில் கொத்தமல்லி மற்றும் புதினா இலை சேர்த்து நன்றாக கிளறி விடவும். மசாலாவில் எண்ணெய் பிரிந்த பிறகு அதில் இப்போது மீன் துண்டுகளை சேர்க்கவும். அதன் பிறகு ஊற வைத்த பாஸ்மதி அரிசி அதில் சேர்க்க வேண்டும். பிறகு மீன் மற்றும் அரிசி உடையாதவாறு பொறுமையாக கிண்டவும் இப்போது அதில் எடுத்து வைத்த தேங்காய் பாலை ஊற்றவும். 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடலாம். இப்போது டேஸ்டியான மீன் பிரியாணி ரெடி!!

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!