
சீன பட்டாசுக்கு நாமம் போட்ட இந்தியா......மன உளைச்சலில் விற்பனையாளர்கள்....!!!
சீனாவை பொறுத்தவரை , தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்க கூடிய நாடு. சீன பட்டாசு என்றால், சொல்லவே தேவை இல்லை அந்த அளவுக்கு பிரபலம்.
இந்நிலையில் வரும் 29 ஆம் தேதி , தீபாவளி நெருங்குவதால், சீன பட்டாசுகள் இந்தியாவிற்கு அடி எடுத்து வைக்க ஆரம்பித்துவிட்டது.
ஆனால்.,டெல்லியை பொறுத்தவரை , கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாகவே சீன பட்டாசுகளை வாங்கி குவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்திய பாகிஸ்தான் இடையேயான பிரச்னையில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீன அரசு கருத்து தெரிவித்து வருவதால், இந்திய அரசியல் தலைவர்கள் சிலர் சீன பட்டாசுகளை பயன்படுத்த கூடாது என கருத்து தெரிவித்துள்ளனர். இதனால், மக்களும் சீன பட்டாசுகளை வாங்குவதை வெகுவாக குறைத்துள்ளனர்.
இதனால், டெல்லி பட்டாசு விற்பனையாளர்கள் மிக பெரிய இழப்பை சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.