பெண்களை உச்சம் தொட வைக்கும் மச்சம்...!அந்தரங்க இடத்தில் மச்சம் இருக்கும் பெண்கள் வேற லெவல் அதிர்ஷடசாலிகள்!

manimegalai a   | Asianet News
Published : Jan 20, 2022, 10:51 AM IST
பெண்களை உச்சம் தொட வைக்கும் மச்சம்...!அந்தரங்க இடத்தில் மச்சம் இருக்கும் பெண்கள் வேற லெவல் அதிர்ஷடசாலிகள்!

சுருக்கம்

ஜோதிடத்தின் படி உடலின் எந்தப் பகுதியில் இருக்கும் மச்சம் எதனை குறிப்பிடுகிறது என்று தெரிந்து கொள்வோம்.

இயற்கையாகவே, மனித உடலில் உள்ள மச்சங்கள் பல விஷயங்களை சொல்கின்றன. நபரின் எதிர்காலம், அவரது இயல்பு மற்றும் அவர் எதிர்கொள்ளும் நோய்களைப் பற்றி கூட மச்சங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம் என்று ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது. இத்தகைய மச்சம் உடலில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் ஏற்படலாம். இவ்வாறு உடலில் தோன்றும் மச்சத்தை அதிர்ஷ்டம் என்று சொல்வார்கள். கடல் சார்வியலில், மச்சத்தின் மூலம் அதிர்ஷ்டத்தை அறிவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஜோதிடத்தின் படி உடலின் எந்தப் பகுதியில் இருக்கும் மச்சம் எதனை குறிப்பிடுகிறது என்று தெரிந்து கொள்வோம்.

 பெண்களுக்கு, கன்னத்தில் மச்சம் இருப்பது மிகவும் நல்லது. கன்னத்தில் மச்சம் உள்ளவர்கள் மிகவும் கவர்ச்சிகரமானவர்கள். பண விஷயங்களிலும் மிகுந்த அதிர்ஷ்டசாலிகள். அத்தகையவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் செல்வச் செழிப்போடு இருப்பார்கள். 

தொப்புல்களுக்கு மேலே மச்சம் காணப்பட்டால் அமைதியும், இன்பமும் கலந்த வாழ்க்கை அமையும். பிறரால் போற்றப்படுபவளாக இருப்பாள்.

பிறப்புறுப்பில் மச்சம் இருக்கும் பெண்கள் வேற லெவல் அதிர்ஷடசாலி ஆவார். அவர்களுக்கு உயர்ந்த பதவிகள் தேடி வரும்.

உள்ளங்கை, முழங்கை, மணிக்கட்டுகளில் மச்சம் இருந்தால் இவர்களது குடும்பம் இனிமையாக இருக்கும். கலாரசனை உடைய பெண்களாக இருப்பார்கள். சிறந்த நிர்வாகியாகவும் இருப்பார்கள்.

நெற்றியில் மச்சம் இருக்கும் பெண்கள் மிகவும் புத்திசாலிகளாகவும் தர்க்க ரீதியானவர்களாகவும் இருப்பார்கள். 

கையில் மச்சம் இருக்கும் பெண்கள் பணத்திற்கு குறைவில்லாமல் இருப்பார்கள். இவர்களிடம் அதிக பணம் இருப்பதோடு சேமிப்பதிலும் இவர்கள் வல்லவர்கள்.

தன்னம்பிக்கை உடையவர்களாகவும் இருப்பார்கள். அதுவே  வலது முழங்காலில் என்றால் பிடிவாதக்கார்களாக இருப்பார்கள். 

பெண்ணின் இடதுபக்க மார்பகத்தில் வலது பக்கமாக மச்சம் இருந்தால் வாழ்வில் படிப்படியாக முன்னேறுவாள். அதுவே இடதுபுறமாக மச்சம் இருந்தால் உணர்ச்சிகள் அதிகம் இருக்குமாம்.

வயிற்றில் மச்சம் இருக்கும் பெண்கள் உணவில் நாட்டம் உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு, அவர்கள் ஆசைப்படுவதைப் போலவே எப்போதும் சாப்பிட மிகவும் சுவையான உணவு கிடைத்துக்கொண்டே இருக்கும். 

நாக்கில் மச்சம் உள்ள பெண்கள் கலை ஞானம் கொண்டவர்களாக இருப்பார்கள். ரசனைகள் அதிகமாக இருக்கும். 

முதுகில் எங்கு மச்சம் இருந்தாலும் துணிச்சலான காரியங்கள் அந்தப் பெண்ணிடத்தில் இருக்கும். வாழ்க்கை வசதிகரமானதாக இருக்கும்.  உடலில் ஆரோக்கியம் திகழும். 

ஆனால், உடலின் எந்தப் பகுதியிலும் சிவப்பு நிற மச்சம் இருப்பது நல்லதாகக் கருதப்படவில்லை. இந்த மச்சம் உடலில் உள்ள வலியைக் குறிக்கிறது. உடலில் சிவப்பு மச்சம் உள்ளவர்களுக்கு எலும்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும். எனவே இந்த விஷயத்தில் அவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

அதேபோன்று, தொடையில் மச்சம் இருந்தால் படிப்படியாக கஷ்டப்பட்டு வாழ்க்கையில் நல்ல நிலைமைக்கு வருவார்கள். வலது தொடையில் மச்சம் என்றால் தற்பெருமையும் அடங்காபிடாரித்தனமும் இருக்கும். 

மோதிர விரலின் இரண்டாம் பாகத்தில் மச்சம் உள்ளவர்கள், உறவில் பலவீனமாக இருப்பதோடு, நீண்ட நாட்களுக்கு யாருடனும் உறவைப் பேண முடியாதவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் நல்ல உறவுகளை எளிதில் இழந்து விடுகிறார்கள்.  என்ன, உடனே உங்களுக்கு எங்க எங்க மச்சம் இருக்குனு பார்க்க போயிட்டீங்களா! 
 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Soft Idli Tips : தட்டில் ஒட்டாமல் 'பஞ்சு' மாதிரி இட்லி வர சூப்பரான சில ஐடியாக்கள் இதோ!!
Spinach for Liver Health : இந்த கீரைய சாதாரணமா நினைக்காதீங்க! கல்லீரல் நோயை தடுக்கும் அருமருந்து