இனி கரோனோவாவது மண்ணாவது...! ஆபீஸ்க்கு கட்டாயம் வருணும்...ஒரு கை பார்த்திட இங்கிலாந்து முடிவு!

By manimegalai aFirst Published Jan 20, 2022, 10:16 AM IST
Highlights

இங்கிலாந்தில் கரோனா கட்டுப்பாடுகள் அடுத்த வாரம் முதல் விலக்கிக் கொள்ளப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 
 

சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு கரோனா வைரஸ் பரவல் துவங்கியது. இதன் தாக்கம் உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இது தற்போது, வரை மூன்று அலைகளாக உருமாறியுள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 56 லட்சத்துக்கு மேலாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கரோனவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவது மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. இது நம் அனைவருக்கும் பல்வேறு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. இந்த 2022இல் நம் அனைவருக்கும் மிகவும் ஆபத்தான கோபம், பயம், பதட்டம், விரக்தி, பீதி, போன்ற மனநலப் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறோம். 

இந்த சூழலில், இங்கிலாந்து அரசு கரோனா கட்டுப்பாடுகள் அனைத்தையும் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது. ஆம், அந்த நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன், வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான தேவை இனி இல்லை என்று தெரிவித்துள்ள நிலையில், கட்டாய முகக்கவசம் உட்பட கொரோனா நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வருவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இங்கிலாந்தில் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் கொரோனா வைரஸ் முதல் அலை ஏற்பட்டபோது, பல்வேறு உயிர் சேதங்களை ஏற்பட்டதை தொடர்ந்து முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனவே, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, மக்கள் கூட்டமாக கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. அப்போது, இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சனும், கரோனா பெருந்தொற்றுக்கு ஆளாகியிருந்தார்.

 இரண்டாவது அலையிலும், உருமாறிய கொரோனா வைரஸ் பரவியதை தொடர்ந்து, இங்கிலாந்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. அத்தியாவசியத்தை தவிர்த்து பிற அனைத்து கடைகளும் மூடப்பட்டன. வீட்டில் இருந்து பணியாற்ற முடிந்த பணியாளர்கள் அங்கிருந்த பணியாற்றவும், அப்படி பணியாற்ற முடியாத பணியாளர்கள் மட்டும் வெளியே வரலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில், தற்போது மூன்றாம் அலை உலகம் முழுவதிலும் பரவ துவங்கியுள்ளது. கரோனா பரவலால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுள் ஒன்றான இங்கிலாந்தில், ஓமைக்ரான் வகை பரவல் கடந்த ஆண்டு இறுதியில் வேகமெடுத்தது. இதனையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் 8ம் தேதி முதல் அங்கு கடுமையான கரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில், இங்கிலாந்தில் கரோனா கட்டுப்பாடுகள் அடுத்த வாரம் முதல் விலக்கிக் கொள்ளப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர், கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் அடுத்த வாரம் முதல் விலக்கிக் கொள்ளப்படும். பூஸ்டர் டோஸ் போடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றதன் பலனாக இது சாத்தியமாகி இருக்கிறது. இதுவரை 36 மில்லியன் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 60 வயதிற்கு மேற்பட்ட 90 சதவிகிதம் பேருக்கு மூன்றாவது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சாதனை அளவில் சென்றுகொண்டிருந்த தினசரி கொரோனா பாதிப்புகளும் தற்போது குறையத்துவங்கியுள்ளன என்றார். இதே போன்று, நம் தமிழகத்திலும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வார இறுதி நாட்களில் வரும் ஊரடங்கை தகர்த்தி இயல்பு நிலைக்கு திரும்புவது எப்போது என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது.

click me!