Laughter mantra: மன அழுத்தம் இன்றி பாஸிட்டிவாக வாழ 'சிரிப்பு மந்திரம்'...காலையில் புத்துணர்ச்சியுடன் இருங்கள்!

By manimegalai aFirst Published Jan 20, 2022, 7:33 AM IST
Highlights

சிரிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை கீழே தெரிந்து கொள்ளுங்கள்.

'வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும்’ என்கிறது பழமொழி. ஆனால், இன்றைய நவீன உலகில் அவற்றை நாம் மறந்து விட்டோம், இல்லை தொலைத்து விட்டோம் என்றே கூறலாம். 'பிஸியான' வாழ்க்கைச் சூழலில் எதிர்காலத்தையும், கடந்த காலத்தையும் நினைத்துக்கொண்டே கடத்தும் நொடிகளின் தொகுப்பே நம்முடைய வாழ்வு. அந்த நொடியில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் சவால்களும் ஏராளம். எனவே, இந்த தொடர்ச்சியான மன அழுத்தமானது, நமது மூளையளவில் பெரிய மாறுதல்களை உண்டாக்குகின்றன. அதனால் நாம் பல சுவாரஸ்யமான தகவல்களை கூட எந்த உணர்வுமின்றி அணுகுவது இயல்பாகிவிட்டது. ஓமைகிறான் கரோனா உள்ளிட்ட தவிர்க்க முடியாத சில நிகழ்வுகள், இந்த 2022இல் நம் அனைவருக்கும் மிகவும் ஆபத்தான கோபம், பயம், பதட்டம், விரக்தி, பீதி, போன்ற மனநலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று கணித்துள்ளது. இது போன்ற சூழ்நிலைகளில் நாம் மகிழ்ச்சியாக கடந்து செல்வது அவசியம்.

மகிழ்ச்சியாக கடந்து செல்ல எப்படி துவங்குவது?

பிடித்தவர்களிடம் அதிக நேரத்தை செலவிடுங்கள்:

யாருடன் இருந்தால், அதிகமாக சிரிப்பீர்களோ அவர்களுடன் அதிகமான நேரத்தை செலவிடுங்கள். தொலைக்காட்சியில் இருக்கும் நல்ல சிரிப்பு நிகழ்ச்சியை போட்டு அடிக்கடி பாருங்கள். நகைச்சுவையான புத்தகத்தை படிக்கலாம். செல்லப்பிராணி பிடிக்கும் என்றால் அவற்றுடன் நேரத்தை செலவிடலாம். மகிழ்ச்சியான விளையாட்டை குடும்ப உறுப்பினர்களுடன் விளையாடுங்கள்.

சிரிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை கீழே தெரிந்து கொள்ளுங்கள்.

மன அழுத்தம்:

மன அழுத்தத்தில் இருந்து விடுபட வேண்டுமானால் நன்றாக வாய்விட்டு சிரித்தாலே போதும். சிரிப்பு இணையான மருந்து வேறெதுவும் இல்லை. மன அழுத்தத்துக்கு காரணமான கார்டிசோல் ஹார்மோன் சுரப்பு நீங்கள் சிரிக்கும்போது கட்டுப்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் மகிழ்ச்சியைத் தூண்டும் எண்டோர்பின் ஹார்மோன் சுரக்கத் தொடங்குகிறது. அடிக்கடி சிரிப்பவர்களுக்கு மனச்சோர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், சிரிப்பு தசை தளர்வுக்கு உதவுகிறது.

2. இதய ஆரோக்கியம்:

நீங்கள் வாய்விட்டு சிரிக்கும்போது உடலுக்குள் அதிகளவு ஆக்ஸிஜன் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதிகளவிலான ஆக்ஸிஜன் சுவாசிப்பு இதய ஆரோக்கியத்தை பேணுவதுடன் மூளைக்கு செல்ல வேண்டிய எண்டோர்பின்களை அனுப்புவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மன அழுத்தம் இருப்பவர்களுக்கு என்டோர்பின் ஹார்மோன்கள் குறைவாக சுரக்கும். இதய ஆரோக்கியமாக இருக்கும்போது மாரடைப்பு மற்றும் பிற இதய நோய்கள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக இருக்கும்.

3. நுரையீரல் பாதுகாப்பு:

உங்களை நீங்களே கவனித்து பாருங்கள். மன அழுத்தத்தில் இருக்கும்போது அல்லது சோர்வாக இருக்கும் போது சுவாசிக்கும் தன்மை மிக குறைவாக இருக்கும். அப்போது, ஆழ்ந்த சுவாசத்தை எடுத்தீர்கள் என்றால், ரிலாக்ஸாக இருப்பதுபோன்ற உணர்வு உங்களுக்கு ஏற்படும். இந்தமாதிரியான அனுபவம் உங்களுக்கு ஏற்கனவே கிடைத்திருக்க வாய்ப்புகள் உண்டு. நுரையீரல் சிறப்பாக செயல்பட மகிழ்ச்சியாக இருப்பது அவசியம். சிரிப்பின் மூலம் உடலுக்குள் செல்லும் தூய்மையான ஆக்ஸிஜன், உங்களை ஆக்டிவாக வைத்திருக்கும்.

4. நோய் எதிர்ப்பு சக்தி:

மன அழுத்தத்தில் இருக்கும்போது உடலின் தசைகள் இறுகிய நிலையில் இருக்கும். இம்மாதியான வாழ்க்கை முறையால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு ஏற்படும். இதனால், சிறிய அளவிலான தொற்றுநோய்களுக்கு கூட நீங்கள் பாதிப்புக்குள்ளாக நேரிடும். அடிக்கடி நோய்வாய் படுவதில் இருந்து நீங்கள் தப்பித்துகொள்ள வேண்டும் என்றால் நன்றாக வாய்விட்டு சிரிக்க வேண்டும். சிரிப்பு உடல் வலிகளை போக்கும்.
 

click me!