Beauty trends: ஆடை அணிவதிலும் ட்ரெண்டிங்காக இருக்கும் தமிழக மக்கள்! பியூட்டி உடையில் நடைபோடும் நவீன கலாசாரம்?

By manimegalai aFirst Published Jan 19, 2022, 2:18 PM IST
Highlights

இந்த 2022-ஆம் வருடத்தில் தமிழகத்தில், ஆதிக்கம் செலுத்தும் ஸ்கின் கேர் மற்றும் பியூட்டி ட்ரெண்ட்ஸ் பற்றி கீழே தெரிந்து கொள்ளலாம்.

இன்றைய நவீன கால கட்டத்தில் கரோனா என்கின்ற கொடிய வைரஸ் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக மக்கள் பலர் தங்களது வீட்டில் இருக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அலுவலகங்கள் சென்று பணிபுரிவோர், 'work from home' என்று சொல்லப்படும் வீட்டில் இருந்து பணிபுரியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வெளிநாட்டில் பணிபுரிய சென்றோர் தங்களது வேலைகளை இழந்து சொந்த நாடு திரும்பியுள்ளனர். இந்த சூழலில், வீட்டில் இருக்கும் பெரும்பாலான மக்கள் தங்களது ஓய்வு நேரத்தினை இணையத்தில் செலவிடுகின்றனர். அவற்றுள் பெருவாரியான மக்கள் சமூக வலைதளங்களில், அழகு குறிப்புகளை தேடுவதில் அதிக நாட்டம் உடையவர்களாக இருக்கிறார்கள். 

சமூக வலைதளங்களில்,  அதிகம் தேடிய தலைப்புகளில் பேஷன், அழகு, ஷாப்பிங் தொடர்பான தேடல்கள் அதிக அளவில் இடம்பெற்றிருந்தன. இது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது அதிக எண்ணிக்கையில் உள்ளன. அதேபோன்று, தோல் பராமரிப்பு தொடர்பான பல்வேறு கேள்விகள் இருந்தன, குறிப்பாக வைட்டமின் சி மற்றும் ஹைலூரோனிக் அமிலம் பற்றி பல கேள்விகள் இருந்தன. இவற்றினுள், ஒரு பகுதி மக்கள் பிரபல ஆடைகளை இணையத்தில் தேடுவதில் அதிக நாட்டம் உடையவர்களாக காணப்பட்டனர். இன்னும், சிலர் பேஷன் தொடர்பான கேள்விகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருத்திருந்தனர். இண்டி ஸ்டைல் (Indie style), அர்பன்  ஸ்டைல் (Urban style), ஸ்ட்ரீட் வியர் ஸ்டைல் (Streetwear style), 90s கிட்ஸ் ஸ்டைல் (80s style clothing), 2k கிட்ஸ் ஸ்டைல் (Y2K style), ரெட்ரோ ஸ்டைல் (Retro style), போஹோ ஸ்டைல் (Boho style) போன்றவை அதிக அளவில் தேடப்பட்டவை.

 இது தொடர்பாக, இந்த 2022-ஆம் வருடத்தில் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஸ்கின் கேர் மற்றும் பியூட்டி ட்ரெண்ட்ஸ் பற்றி தனது கருத்துக்களை அழகு கலை நிபுணர் பகிர்ந்து உள்ளார்.

ப்ளூ லைட் ப்ரொடக்ஷன் (Blue Light Protection):

நீண்ட நேரம் லேப்டாப் அல்லது ஸ்கிரீனை பார்க்க வேண்டிய சூழல் இருப்பதால் மக்கள் தங்கள் சருமத்தைப் பாதுகாக்க உதவும் தயாரிப்புகளுக்கு முன்னுரிமை தருகிறார்கள். ஏனென்றால் ஸ்கிரீன்களில் இருந்து வெளிப்படும் ப்ளூ லைட் சருமத்தின் இயற்கையான பொலிவை பாதித்து அதிக சுருக்கங்களை ஏற்படுத்தலாம். புற ஊதா கதிர்கள் மற்றும் ப்ளூ லைட்டிலிருந்து நம்மைப் பாதுகாப்பதால், நம் வாழ்வில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தயாரிப்பு SPFஆகும்.

ஜென்டர் நியூட்ரல் ப்ராடக்ட்ஸ் (Gender Neutral Products)

இன்றைய கால கட்டத்தில் ஆண்களும் சருமப் பராமரிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அவர்கள் குளிர்காலத்தில் முகத்தை எப்படி பராமரிப்பது, முடியை எப்படி வெட்டுவது, எப்படி  உடை அணிவது போன்றவற்றில் அதிக ஈடுபாடு கொண்டுள்ளனர். 

கஸ்டமைஸ்டு ஸ்கின்கேர் (Customized Skincare):

தங்களுக்காகவே கஸ்டமைஸ்டு முறையில் க்யூரேட் செய்யப்பட்ட ஸ்கின் கேர் பொருளை யாருக்குத்தான் பிடிக்காது? சரும தோல் வகைகள் மற்றும் கவலைகளுக்கு ஏற்ப தயாரிப்புகளை வைத்திருக்க வேண்டும் என்ற விருப்பம் வலுவாக உள்ளது. நுகர்வோர் தங்களுக்குப் பொருத்தமான தயாரிப்பை தேடுவதால், தங்களின் ஸ்கின் கேர் நடைமுறைகளை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள் என்றார். 

click me!