Vaginal Dryness: செக்ஸின் போது பெண்ணுறுப்பில் அடிக்கடி வறட்சி ஏற்படுதா...? மகப்பேறு மருத்துவர் விளக்கம்...

By manimegalai aFirst Published Jan 19, 2022, 11:50 AM IST
Highlights

பெண்ணுறுப்பில் ஏற்படும் வறட்சி குறித்து மகப்பேறு மருத்துவர், கூறும் விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

செக்ஸ் என்பது ஆண், பெண் ஆகிய இருபாலருக்கும் ஒரு இன்பமான அனுபவம் ஆகும். அன்பை உருவாக்குவது மிகவும் தீவிரமான உடல் செயல்பாடாகும். ஆனால், உடலுறவில் ஈடுபடும் சில பெண்களுக்கு இது வேதனையனாக அமைகிறது. இதற்கு காரணம், உடலுறவின் போது பெண்ணுறுப்பில் ஏற்படும் வறட்சி.  இந்த வறட்சியினால் அரிப்பு, எரிச்சல் ஏற்பட்டு, பெண்கள் உடலுறுவின் போது மிகுந்த வலியையும் கஷ்டத்தையும் அனுபவிக்கின்றனர். 

எனவே, வலியுடன் ஒரு பெண்ணால் உடலுறவு கொள்ள முடியாது என்பதால் அவர்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்கின்றனர். செஸ்ஸின் போது தனது துணை அதிக ஆனந்த நிலை அடையும் தருணத்தைக் காணும்போது, மற்றொருவருக்கும் அதில் பேரானந்தமும், ஈடுபாடும் அதிகரிக்கும். ஆனால், பெண்ணுறுப்பில் ஏற்படும் வறட்சி தங்கள் துணையின் சந்தோஷத்தை கெடுப்பதாகவே உள்ளது. ஏன்? எதனால்? இவற்றை தெரிந்து கொள்வது அவசியம். 

பெண்ணுறுப்பில் ஏற்படும் வறட்சி குறித்து மகப்பேறு மருத்துவர், கூறும் விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, பெண்ணுறுப்பில் ஈரப்பதத்தை கொடுக்க ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் மிகவும் முக்கியம். சில பெண்களுக்கு ஹார்மோன் சமநிலையின்மையால் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைகிறது. பின்னர் இதுவே பெண்ணுறுப்பில் வறட்சியை உண்டாக்க காரணமாகி விடுகின்றன. இதனால் பாலியல் உறவு கொள்ளும் போது கடுமையான சிக்கல் ஏற்படுகிறது. இதற்கு மாய்ஸ்சரைசர், எண்ணெய்கள் போன்றவற்றை பயன்படுத்தி வரலாம். லூப்ரிகண்டுகள் பாலியல் இன்பத்தை அதிகரிக்கவும், உடலுறவின் போது வலியை குறைக்கவும் உதவுகிறது.

ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் பயன்பாடு:

ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் ஒரு பெண் பருவமடைய காரணமான ஹார்மோன். மாதவிடாய் சுழற்சி ஆரம்பித்த நாட்களில் இருந்து மாதவிடாய் சுழற்சி நிற்கும் வரை இந்த ஹார்மோன் சுரப்பு ஒரு குறிப்பிட்ட அளவு இருந்து கொண்டே இருக்கும். இந்த ஹார்மோன் சுரப்பு தான் பெண்ணுறுப்பை தடினமாகவும் மீள் தன்மையுடன் பிசு பிசுபிசுப்பு தன்மையுடன் வைத்திருக்கும். இந்த ஹார்மோன் பல காரணங்களால் குறைய வாய்ப்புள்ளது. இதனால் தான் பெண்ணுறுப்பில் வறட்சி உண்டாகிறது.

வறட்சி ஏற்படுவதற்கான முக்கிய காரணம்:

பிரசவத்திற்கு பிறகு தாய்ப்பால் கொடுக்கும் போது, பெண்ணுறுப்பில் ஏற்படும் தொற்றுகள், 40 வயதிற்கு பிறகு மாதவிடாய் நிற்கும் காலகட்டம், அதிகமாக புகைப்பிடித்தல் போன்ற பிரச்சினைகளும் அந்தரங்க பகுதியில் வறட்சியை ஏற்படுத்துகிறது. 

பிறப்புறுப்பில் ஏற்படும் வறட்சியை போக்கும் வழிமுறைகள்:

1. பெண்ணுறுப்பில் ஏற்படும் வறட்சியை போக்க லாக்டோபாகிலஸ் அடங்கிய உணவான யோகார்ட், தயிர் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். 

2. ஈஸ்ட்ரோஜன் க்ரீம், லேசர் புத்துணர்ச்சி சிகிச்சை மேற்கொள்ளலாம்.  
 
3. அடிக்கடி பிறப்புறுப்பு பகுதியைக் கழுவுவதை தவிருங்கள்.

4. அதிக வாசனை கொண்ட சோப்புகள் அல்லது லோஷன்களைத் தவிருங்கள்.

5. காட்டன் உள்ளாடைகளை அணியுங்கள்.

6. இயற்கையிலேயே பைட்டோ ஈஸ்ட்ரோஜன் அடங்கிய சோயா, நட்ஸ், விதைகள், டோஃபு போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

7. புகைப்பழக்கமும் உங்க ஈஸ்ட்ரோஜன் அளவை குறைக்க வாய்ப்பு உள்ளது. எனவே, புகைப்பழக்கத்தை தவிருங்கள்.

பெண்ணின் அந்தரங்க பகுதி இயற்கையாகவே ஈரப்பதமான ஒன்று. அந்தப் பகுதியில் உள்ள லாக்டோபாகிலஸ் என்ற பாக்டீரியா பெண்ணுறுப்பின் pH அளவையும் ஈரப்பதத்தையும் சமமாக வைக்கிறது. இது பெண்ணுறுப்பை சுத்தமாகவும், வெளிப்புற கிருமிகளால் பாதிப்பு ஏற்படாமலும் பராமரிக்கிறது.  இருப்பினும், ஒரு சில பெண்கள் அதிகப்படியான வறட்சியை உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதிப்பது நல்லது. 
 

click me!