How to check salt purity: நீங்கள் வீட்டில் உபயோகிக்கும் உப்பு ஆரோக்கியமானதா? கண்டறிய நிபுணர்கள் அட்வைஸ்..

By manimegalai aFirst Published Jan 19, 2022, 9:22 AM IST
Highlights

​​ஒவ்வொரு முறையும் பயன்படுத்துவதற்கு முன்பு உங்கள் சமையலறையில் உள்ள உப்பு தூய்மையானது தானா என்பதை சரிபார்க்கவும்.

உப்பிட்ட வரை உள்ளளவும் நினை, என்பது நம் முன்னோர்களின் பழமொழி. நம் முன்னோர்கள் அதன் ஆரோக்கிய தன்மை கருதியே அவ்வாறு கூறுவர். ஆனால், இன்றைய நவீன உலகில் உப்பு உடல் ஆரோக்கியமற்றதாக மாற துவங்கியுள்ளது. என்னது, உப்பு நோயை உண்டாக்குமா? அது மனித உடலுக்கு எவ்வளவு அத்தியாவசியம்.  உப்பு இல்லாமல் நம் சமையலறை முழுமையடையாது. அன்றாட சமையலில் உப்பு என்பது ஒரு அடிப்படை பொருள்.

உப்பு முதன்மையாக சோடியம் குளோரைடு கொண்ட ஒரு கனிமம், சரியான அளவில் எடுத்துக் கொள்ளப்படும் உப்பு, பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருக்கிறது. சந்தையில் பல்வேறு வகையான உப்பு கிடைக்கிறது. அதில், ​​நாம், உட்கொள்ளும் உப்பினை சரிபார்ப்பது அவசியம். எனவே, நீங்கள் உட்கொள்ளும் உப்பின் தூய்மையைக் கண்டறிய, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வழங்கும் இரண்டு எளிய உதவிக்குறிப்புகள் இங்கே உள்ளன.

சாதாரண உப்பு என்றால் என்ன?

இது அயோடினுடன் செறிவூட்டப்பட்ட உப்பின் சுத்திகரிக்கப்பட்ட பதிப்பு. இது சுத்திகரிக்கப்பட்ட பால் வெள்ளை நிறத்தில் உள்ளது மற்றும் நீங்கள் சேர்க்கும் எதனுடனும் தடையின்றி கலக்கிறது.

ஆனால் சந்தையில் கிடைக்கும் பொதுவான உப்புகளில் பெரும்பாலும் கலப்படம் செய்யப்படலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? அப்படியானால், பொதுவான உப்பின் தூய்மையை எப்படி கண்டறிவது என்ற கேள்வி எழுகிறதா? கவலைப்பட வேண்டாம் அதற்கு தீர்வு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, இந்துப்பு (Rock Salt) பயன்படுத்தலாமா, இந்துப்பு அனைத்து உப்புகளையும் விட மேன்மையானதா என்பன போன்ற சந்தேகங்கள் நம்மிடையே உலா வருகின்றன. குறிப்பாக இன்றைக்கு இந்துப்பு பற்றி பல்வேறு விதமான தகவல்கள் வருவதால் அதுபற்றி ஆராய்வதும் சரியாக இருக்கும்.  

எனவே, நீங்கள் உட்கொள்ளும் உப்பின் தூய்மையைக் கண்டறிய இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வழங்கும் இரண்டு எளிய உதவிக்குறிப்புகள் இங்கே உள்ளன.

டிப்ஸ் 1

 ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் உப்பு எடுத்து நன்றாக கலக்கவும். உப்பில், சுண்ணாம்பு கலப்படம் செய்யப்பட்டிருந்தால், அது வெண்மை நிறமாக மாறும். கரையாத பிற அசுத்தங்கள் அடியில் படியும்.

டிப்ஸ் 2

ஒரு உருளைக்கிழங்கை எடுத்து 2 பகுதிகளாக வெட்டவும். வெட்டப்பட்ட மேற்பரப்பில் லேசாக உப்பு பொடியை தூவிவிடுங்கள். ஒரு நிமிடம் காத்திருக்கவும். இப்போது இரண்டு மாதிரிகளிலும், இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு சேர்க்கவும். உப்பில் கலப்படம் இருந்தால், உருளைக்கிழங்கின் மேற்பரப்பு நீல நிறமாக மாறும்.

உப்பில் ஆரோக்கியமான பல்வேறு மருத்துவக் குணங்கள் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அளவுக்கு மீறி பயன்படுத்தினால் ஆபத்தை ஏற்படுத்தும். அதேபோன்று, இந்துப்பை பயன்படுத்துவதால், செயலிழந்த சிறுநீரகம் பழைய நிலைக்குத் திரும்பி புத்துயிர் பெறும் என்று சொல்வதெல்லாம் பொய். சிறுநீரகத்தில் பிரச்னையை வைத்துக்கொண்டு இந்துப்பை மட்டுமே கொண்டு சரி செய்துவிடலாம் என்று சொல்வது மிகப்பெரிய தவறு. சமூக வலை தளங்களில் இதுபோன்று பரப்பப்படும் அனைத்துத் தகவல்களையும் உண்மையென்று நம்பிவிடக்கூடாது. சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருக்கும் போது, அதன் செயல்படும் திறன், கழிவுகளை வெளியேற்றும் ஆற்றல் ஆகியவற்றைப் பொறுத்தே சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

எனவே, ​​ஒவ்வொரு முறையும் பயன்படுத்துவதற்கு முன்பு உங்கள் சமையலறையில் உள்ள உப்பு தூய்மையானது தானா என்பதை சரிபார்க்கவும்.


 

click me!