தினமும் சளி, காய்ச்சலால் அவதிப்படுறீங்களா? இம்யூனிட்டியை அதிகரிக்கும் தேன் கலந்த இலவங்கப்பட்டை டீ குடிங்க!

By manimegalai aFirst Published Jan 19, 2022, 7:27 AM IST
Highlights

தேன் கலந்த இலவங்கப்பட்டை தேநீர் உடல் நலனுக்கும், நோய் எதிர்ப்புக்கும் பயன்படுவதோடு, சளி, காய்ச்சல் முதலானவற்றில் இருந்து நம்மைப் பாதுகாக்கிறது. 

காரனோ ஓமைக்ரான் தொற்று, உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவ தொடங்கியுள்ளது. பல ஆண்டுகளுக்குப் பின்னர், இந்த வருடம், சமூகம் சார்ந்த சில பிரச்சனைகள் மற்றும் பொருளாதார பின்னடைவு போன்றவற்றிலிருந்து மீண்டுவரும் முயற்சியில் நாம் 'கத்தியின் விளிம்பில்' இருக்கிறோம் என்பதை நினைவில்கொள்ள வேண்டும். மன அழுத்தம் நாட்பட்டதாக நிலைக்கும்போதே, அது உடல் நலனைப் பாதிக்கிறது. மனநலனுக்கும் கேடானதாக வலுப்பெறுகிறது. இதன் தாக்கம், தனிமை, சோகம், வேலையிழப்பு, மனச்சோர்வு, மற்றும் மனதளவிலான பிரச்சனைகள் உள்ளிட்ட தவிர்க்க முடியாத நெகடிவ் சிந்தனைகளை நம் அனைவருக்கும் வழங்கியுள்ளது.

எனவே, நாம் இந்த 2022 ஆம் ஆண்டினை மகிழ்ச்சியாக வாழ்வதற்கு, தேவையற்ற நெகட்டிவ் செயல்களை கைவிடுவது அவசியமாகிறது. இந்த சூழ்நிலைகளில், இருந்து ஒவ்வொருவரும் தங்களை தற்காத்து கொள்ள நோய் எதிர்ப்பை சக்தியை அதிகரிப்பது அவசியம். எனவே, பல்வேறு வர்த்தக நிறுவனங்களும், அமைப்புகளும் நோய் எதிர்ப்பை முன்னிலைப்படுத்தும் உணவு வழிமுறைகளை அறிவுறுத்தி வருகின்றன.  

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உடல் ஆரோக்கியத்திற்காக வீட்டு வைத்தியமும், இயல்பாக உண்ணப்படும் உணவுப் பழக்கமும் நமக்குக் கைகொடுக்கின்றன. வீட்டு சமையலறையில் எப்போதும் இருக்கும் இலவங்கப் பட்டையும், தேனும் மனித உடலுக்குப் பல்வேறு நலன்களை ஏற்படுத்தும் குணம் கொண்டவை. இவற்றால் செய்யப்படும் தேநீர் உடல் நலனுக்கும், நோய் எதிர்ப்புக்கும் பயன்படுவதோடு, சளி, காய்ச்சல் முதலானவற்றில் இருந்து நம்மைப் பாதுகாக்கிறது. 

தேன், இலவங்கப் பட்டை - இரண்டிலும் நோயைக் குணப்படுத்தும் பல்வேறு நற்குணங்கள் நிரம்பியுள்ளன. தேன் உண்பதன் மூலம் உடலில் உள்ள நோய்கள் சரியாவதோடு, அழியும் நிலையில் உள்ள செல்கள் குணமாகின்றன. இலவங்கப் பட்டையும் உடலைச் சரி செய்வதற்கான பல்வேறு ஊட்டச்சத்துகள் நிரம்பியதாக உள்ளது. இந்த இரண்டு பொருள்களும் இணையும் போது, அவை அலர்ஜிகளுக்கு எதிராகவும், உடலில் ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வாகவும் அமைகின்றன. மேலும் மலச்சிக்கலைத் தீர்ப்பதிலும் இவற்றிற்குப் பெரும் பங்குண்டு. எனவே, இலவங்கப் பட்டையும் தேனும் சேர்க்கப்பட்ட தேநீர் உடல் நலனுக்குப் பெரிதும் பயன்படுகிறது. 

மிக சுலபமாக செய்யக் கூடிய இந்த தேநீரை அதிகாலையில் வெறும் வயிற்றில் பருகுவது  உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.  

தேவையானப் பொருள்கள்:

1/4 டீஸ்பூன் இலவங்கப் பட்டைத் தூள்
1 டீஸ்பூன் தேன்
1 கப் தண்ணீர் 

செய்முறை:

1. முதலில் தண்ணீரைக் கொதிக்க வைக்க வேண்டும். அடுத்து இலவங்கப் பட்டைத் தூளைச் சேர்த்து, நன்கு கலக்கிவிடவும்.

2.  இரண்டாவது  2 முதல் 3 நிமிடங்களில் தண்ணீரின் கொதிப்பு அடங்குமாறு செய்ய வேண்டும். 

3. இதனை ஒரு கப்பில் ஊற்றி, அதனோடு தேன் சேர்த்து, சற்றே சூடு ஆறியவுடன் பருகலாம். இந்த வகையான தேநீர் நல்ல உடல் நலனுக்கும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்கும் பயன்படுகிறது. எனவே, மேற் கூறிய வழிமுறைகள் பின்பற்றி உடல் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வைத்து கொள்ளுங்கள்.

click me!