மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்கும் அரோமா தெரபி: எளிய முறையில் கடைபிடிப்பது எப்படி?

By manimegalai aFirst Published Jan 19, 2022, 6:36 AM IST
Highlights

மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்க, அரோமா தெரபி என்கிற வழிமுறை பெரிதும் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்க, அரோமா தெரபி என்கிற வழிமுறை பெரிதும் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன 'பிஸியான' வாழ்க்கைச் சூழலில் எதிர்காலத்தையும், கடந்த காலத்தையும் நினைத்துக்கொண்டே கடத்தும் நொடிகளின் தொகுப்பே நம்முடைய வாழ்வு. அந்த நொடியில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் சவால்களும் ஏராளம். எனவே, இந்த தொடர்ச்சியான மன அழுத்தமானது, நமது மூளையளவில் பெரிய மாறுதல்களை உண்டாக்குகின்றன. அதனால் நாம் பல சுவாரஸ்யமான தகவல்களை கூட எந்த உணர்வுமின்றி அணுகுவது இயல்பாகிவிட்டது.

இதை அதகிரிக்கும் வண்ணம் கரோனா தொற்று உருவெடுத்து, மாபெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதனை சரி செய்வதற்கு மாத்திரைகள் பயன்படுத்துவதை காட்டிலும், உடல் நலத்தை சில பாரம்பரிய முறைகளின் படி பாதுகாத்து கொள்ளலாம். இதற்கு, அரோமா தெரபி என்கிற வழிமுறை பெரிதும் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த பதிவில் அரோமா தெரபி பற்றியும், அதன் பயன்கள் பற்றியும் விரிவாக பார்ப்போம்.

அரோமா தெரபி : அரோமா தெரபி என்பது ஒரு நறுமண மருத்துவம் ஆகும். இதை செய்வதற்கு லெவெண்டர் எண்ணெய், டீ ட்ரீ ஆயில், லெமன் ஆயில், பெப்பர்மிண்ட் எண்ணெய் போன்றவற்றில், எதை வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம். பிறகு மூன்று முதல் ஐந்து சொட்டுக்கள் இந்த எண்ணெயை எடுத்து சிறிது தண்ணீருடன் சேர்த்து, 30-60 நிமிடங்களுக்கு இதை சுவாசிக்க வேண்டும். இந்த எண்ணெய்கள் அதிக வாசனை கொண்டவை. மேலும், இவை நேரடியாக உங்கள் உடலில் உறிஞ்சப்படுகின்றனர்.

மன அழுத்தம் மற்றும் பதற்றம்:

அரோமாதெரபி மன அழுத்தம் அல்லது பதற்றத்தை போக்க உதவும். மனதை அமைதிப்படுத்தவும், ஆழமாக சுவாசிக்கவும் மற்றும் ஓய்வெடுக்கவும் இது உதவுகிறது. சோர்வான மனதை இது சரியானது. குறிப்பாக நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி, இரத்த அழுத்தத்தை சீராக்கி மன அழுத்தத்தை குறைக்கிறது.

அரோமாதெரபி குளியல்:

 அரோமாதெரபி குளியலையும் நீங்கள் பயன்படுத்தலாம். அரோமா தெரபியுடன் இசையைக் கேட்பது, புத்தகம் படிப்பது, யோகா செய்வது அல்லது தியானம் செய்வது போன்றவற்றையும் சேர்த்து கொள்ளலாம். இது சிறந்த மன நிம்மதியை உங்களுக்கு தரும்.

 நிம்மதியான தூக்கம்:

மூளையின் செயல்பாடு மற்றும் நினைவாற்றலுக்கு நல்ல தூக்கம் அவசியமானது. எனவே அரோமா தெரபி செய்வதன் மூலம் நிம்மதியான தூக்கத்தை தருகிறது. லாவெண்டர் எண்ணெய்யை தூக்க பிரச்சனை உள்ளவர்கள் பயன்படுத்தலாம். இந்த எண்ணெய்யை பயன்படுத்தி ஒரு சூடான குளியல் போடலாம். பிறகு நல்ல தூக்கம் கிடைக்கும்.
 
பசியின்மை:

அரோமா தெரபியை மேற்கொண்டு வந்தால் பசியின்மை சார்ந்த பாதிப்புகள் நீங்கும். இது உங்களின் நரம்பு மண்டலத்தை இலகுவாக்கி சீராக இரத்த ஓட்டத்தை ஏற்படுத்தும். அதன் பிறகு உங்களுக்கு நல்ல பசியை தரும். மேலும் நல்ல ஆற்றலையும் இதன் மூலம் பெறலாம்.


 
உடல் உபாதைகளை தடுக்கும்:

வயிற்றுப் பிடிப்புகள், தலைவலி, கழுத்து வலி, முழங்கால் வலி மற்றும் கீழ் முதுகுவலி உள்ளிட்ட அனைத்து வலிகளில் இருந்தும் நிவாரணம் பெற அரோமாதெரபி உதவுகிறது. இந்த இயற்கை எண்ணெய் கலவையை கொண்டு லேசாக மசாஜ் செய்து வந்தால் தசை வலிகள் முற்றிலுமாக பறந்து போய்விடும்.

click me!