வீட்டில் மகிழ்ச்சியையும்...வளத்தையும் அள்ளிக் கொடுக்கும் குபேர பொம்மை..! வாஸ்து, சாஸ்திரம் சொல்வது என்ன?

manimegalai a   | Asianet News
Published : Jan 20, 2022, 08:22 AM ISTUpdated : Jan 20, 2022, 08:26 AM IST
வீட்டில் மகிழ்ச்சியையும்...வளத்தையும் அள்ளிக் கொடுக்கும் குபேர பொம்மை..! வாஸ்து, சாஸ்திரம் சொல்வது என்ன?

சுருக்கம்

சிரிக்கும் குபேர பொம்மை, மகிழ்ச்சி, செல்வம் மற்றும் செழிப்புக்கு சிறப்பு வாய்ந்தது. ஆனால், அதை வீட்டில் சரியாக வைப்பது அவசியம் என்று வாஸ்து, சாஸ்திரம் சொல்கிறது.

சிரிக்கும் குபேர பொம்மை, மகிழ்ச்சி, செல்வம் மற்றும் செழிப்புக்கு சிறப்பு வாய்ந்தது. ஆனால், அதை வீட்டில் சரியாக வைப்பது அவசியம் என்று வாஸ்து, சாஸ்திரம் சொல்கிறது.

வீட்டில் நாம் வைத்திருக்கும் அழகழகான பொம்மைகளுள், குபேர பொம்மையும் (Laughing Buddha) அடங்கும். பொதுவாக நம்முடைய பூஜை அறையில் குபேர பொம்மையை (Laughing Buddha) வைத்து வழிபாடு செய்வது வழக்கம். ஒருசிலர் அழகுக்காக வீட்டில் வைப்பதும் உண்டு. புத்த மதத்தை சேர்ந்தவர்கள் குபேர பொம்மையை வாங்கி வழிபடுவதை நாம் பார்க்கிறோம். ஆனால், குபேர பொம்மையை பொதுவாக வீட்டில் எந்த திசையை நோக்கி வைத்து வணங்க வேண்டும் என்பது மிக மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

பெங் சுயி என்பது சூழலுடன் இசைந்து வாழ்வது தொடர்பாக, நேர்மறை ஆற்றலை உண்டாக்கும் வகையிலான சீனாவில் புழக்கத்தில் உள்ள பாரம்பரிய விஷயங்கள். இது இந்தியாவின் வாஸ்து சாஸ்திரம் போன்றதாகும். வாஸ்து சாஸ்திரத்திலிருந்தே பெங் சுயி தோன்றியிருக்கக்கூடும் என்றும் கருதப்படுகிறது. தற்காலத்தில் பெங் சுயி என்பது, சீனாவின் எல்லைகளைத் தாண்டி உலகின் பல பகுதிகளிலும் பின்பற்றப்படுகிறது.

பெங் சுய் நடைமுறையில் சிரிக்கும் குபேர பொம்மைக்கு (Laughing Buddha) சிறப்பு முக்கியத்துவம் உண்டு. இதை, வீட்டில் வைத்திருப்பதால் குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சி நிலவும் என்பது நம்பிக்கை. இத்துடன், கடன் பிரச்னையும் விலகும் என்பது நம்பிக்கை. குபேர பொம்மை (Laughing Buddha) மகிழ்ச்சி, செல்வம் மற்றும் செழிப்பின் சின்னமாக கருதப்படுகிறது. குபேர பொம்மையை (Laughing Buddha)  வீட்டில் எப்படி வைத்தா அதிக பலன் தரும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

வீட்டின் பிரதான கதவுக்கு முன்னால் குபேர பொம்மை (Laughing Buddha) வைக்க வேண்டும். இதன் காரணமாக, வீட்டில் நேர்மறை ஆற்றல் பரவுகிறது. இது தவிர, வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு இது நல்ல உணர்வை கொடுக்கிறது. வீட்டுக்குள் வரும் அனைவருக்கும் தெரியும் வகையில் வீட்டு வாயில் அருகில் வைக்க வேண்டும். சிரிக்கும் புத்தரை படுக்கையறையில் வைக்கக் கூடாது.

பெங் சுய் நடை முறையில், குபேர பொம்மை (Laughing Buddha) உட்கார்ந்து சிரிப்பது மிகவும் நல்ல பலன்களைத் தருவதாக நம்பப்படுகிறது. குபேர பொம்மையை (Laughing Buddha) சரியான திசையில் வைத்திருப்பது வாழ்க்கையில் மகிழ்ச்சியை அள்ளித் தருகிறது. குபேர பொம்மை கிழக்கு திசையில் வைக்கப்பட வேண்டும். இது வீட்டில் மகிழ்ச்சியைத் தரும். இதனுடன், குடும்ப உறுப்பினர்களுக்கு வேலை வியாபாரத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

குபேர பொம்மை (Laughing Buddha) இரண்டரை முதல் மூன்றடி உயரத்தில் இருந்தால், மிகவும் மங்களகரமானது. குபேர பொம்மை சிலையை சமையலறையிலும் வைக்கக்கூடாது. வீட்டில் கருத்து வேறுபாடு நிலவினால், அமர்ந்திருக்கும் நிலையிலான குபேர பொம்மை (Laughing Buddha) சிறந்த பலனளிக்கும். இந்த குபேர பொம்மையை கைகளை உயர்த்திய நிலையில் இருப்பது அவ்வளவு நல்லதல்ல. குபேர பொம்மைகள் (Laughing Buddha) சந்தையில் பல வடிவமைப்புகளில் காணப்படுகின்றன. ஆனால் வீட்டில், லாபிங் புத்தா, பைகளை ஏந்தி இருக்கும் குபேர பொம்மை (Laughing Buddha), உலோகத்தால் செய்யப்பட்ட குபேர பொம்மை (Laughing Buddha) ஆகியவற்றை வீட்டில் வைத்திருப்பது மங்களகரமானது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்