ஆண்களுக்கான "ரகசிய செய்தி இதோ"..!

Asianet News Tamil  
Published : Jul 10, 2018, 03:13 PM ISTUpdated : Sep 19, 2018, 02:40 AM IST
ஆண்களுக்கான "ரகசிய செய்தி இதோ"..!

சுருக்கம்

Secret news for mens

ஆண்களுக்கான ரகசிய செய்தி இதோ..!

குடும்ப வாழ்கையில் என்டர் ஆகி இருக்கும் புதுமண தம்பதிகள் முதல் பல ஆண்டுகளாக மிக சிறப்பாக வாழ்ந்து வரும் தம்பதிகள் வரை இன்றளவும் ஒரு சில விஷயங்களுக்காக கண்டிப்பாக வீட்டில் சண்டையிட்டு, இருவரும் கோபித்துக்கொள்வார்கள்..அல்லது கணவர் வீட்டிற்கு வந்தாலே முகத்தை சுழிக்கும் மனைவிமார்கள்...அல்லது மனைவி பார்த்தால் ஒரு சில கணவன் மார்கள் வித்தியாசமாக நடந்துக் கொள்வது என பல விஷயங்கள் நடைப்பெறுவது வழக்கமான ஒன்று.

சரி வாங்க இது போன்ற பிரச்சனைகளை வராமல் தடுக்க கணவன்மார்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்

அலுவலகம் முடிந்து வீட்டிற்கு செல்லும் போது, மனைவிக்கு என்ன வேண்டும் என முதலில் கால் செய்து கேட்டுக்கோங்க...வரும் போது என்ன வாங்கிட்டு வர வேண்டும் என்று....

அதே போன்று திருமணநாள், அல்லது குடும்ப உறுப்பனர்களின் பிறந்த  நாள் அல்லது மிக முக்கியமான நாட்களில் மனைவிக்கு அழகாக ஒரு கிப்ட் வாங்கி தர மறந்து விடாதீர்கள்....

மனைவி புதிதாக ஆடை அணிந்து இருந்தால் இந்த ஆடை உங்களுக்கு மிக அழகாக உள்ளதே என கூறுங்கள்...

எப்போதும் முகத்தை உர்ருன்னு வைக்காமல் மனைவியை பார்க்கும் போதெல்லாம் சின்னதா ஒரு ஸ்மைல் கொடுங்கள்..

இத்தனை நாட்கள் நீதானே எனக்காக சமையல் செய்தாய்..இன்று ஒரு நாள்.. நான் உனக்காக செய்கிறேன் என சொல்லி பாருங்கள்...அவர்கள் அப்படியே அசந்துவிடுவார்கள்....

வாரத்திற்கு ஒரு முறை கோவிலுக்கு செல்வதோ அல்லது மாதத்திற்கு ஒருமுறை வெளியில் சென்று ஓட்டலில் உணவு அருந்துவது, பார்க், பீச் என எங்காவது சென்று வாருங்கள்..எப்போதும் வீட்டிலேயே அடைந்துக்கிடப்பதை யாரும் விரும்ப மாட்டார்கள்.

கொஞ்சம் நேரமாவது தன் பிள்ளைகளுக்காக நேரத்தை செலவிடுங்கள்.

என்னுடைய ஹேர் ஸ்டைல் எப்படி இருக்கு..என்னுடைய ட்ரெஸ் எப்படி இருக்கு...இது உன்னோட சேரிக்கு மேட்ச் ஆகுதா என கேள்விகேட்டு மனைவியை பாசமாக வைத்துக்கொள்ளுங்கள்....

சிறு குறை என்றாலும் அதனைசொல்லி சொல்லி காண்பித்து அவர்கள் மனதில் ஒரு விதமான கஷ்டமான சூழ்நிலைக்கு தள்ளப்பட வேண்டாம்...

ஆக மொத்தத்தில் சில விஷயங்களை அனுசரித்து சென்றாலே வாழ்க்கை மிக சிறப்பாக அமையும்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Pongal 2026: பொங்கல் எந்த திசையில் பொங்கி வழிந்தால் அதிர்ஷ்டம்? இந்த திசையில் மட்டும் பொங்க கூடாது.!
குளிர்காலத்துல கரண்ட் பில் அதிகமா வருதா? இதோ இந்த சிம்பிள் மேஜிக் பண்ணுங்க.. பாதி காசு மிச்சமாகும்!