வாவ்..! பொய்யான தகவல் வந்தால் வாட்ஸ் அப்பில் "டிக் சிவப்பாக" மாறும்..!

First Published Jul 10, 2018, 1:58 PM IST
Highlights
red tick will appear if we receive wrong news in whats app


வாவ்....பொய்யான தகவல் வந்தால் வாட்ஸ் அப்பில் டிக் சிவப்பாக மாறும்..!

சமூக வலைதளங்களில் ஒன்றான வாட்ஸ் ஆப் பெரும்பாலான நபர்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பேஸ்புக் மூலம் செய்திகள் மற்றும் தகவல் பரிமாற்றங்கள் உடனுக்கு உடன் பகிரப்பட்டு வருகிறது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, வாட்ஸ் ஆப் மூலம் பகிரப்பட்டு வரும் தகவல்கள் எந்த அளவிற்கு உண்மை என்பது அறிய மிகவும் சிரமாக கருதப்பட்டது

எதை நம்புவtது..எதை நம்ப கூடாது... எந்த செய்தி உண்மையானது..எது  சாதாரண தகவல்...எந்த தகவல் வதந்தி உள்ளிட்ட வற்றை இனி எளிதில் கண்டுப்பிடிக்கும் வகையில் வாட்ஸ் ஆப் புதிய சலுகையை அறிமுகம் செய்து உள்ளது

அதாவது ஒருதகவலை ஒரு குழுவிலிருந்து வேறு ஒரு குழுவிற்கு அனுப்பும் போது, அது போலியான தகவலாக இருந்தால், எப்போதும் இருக்கும் ப்ளூ நிற டிக்குக்கு பதிலாக சிகப்பு நிற டிக் காண்பிக்கும்.

இணையதள முகவரியை ஆதாரமாகக் கொண்டு அது உண்மையான செய்தியாக இருப்பின் ப்ளூ கலர் டிக் இருக்கும் இல்லை என்றால்,சிகப்பு நிற டிக் இருக்கும்.

இனி வரும் காலங்களில் இது போன்ற தகவல்களை பரிமாற்றம் செய்யும் போது அதன் உண்மை தன்மையை அறிந்துக்கொள்ள இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது  

click me!