மீண்டும் ஜன.4 தான் பள்ளிகள் திறப்பு..! மாணவர்கள் குஷியோ குஷி..!

thenmozhi g   | Asianet News
Published : Dec 30, 2019, 07:02 PM IST
மீண்டும் ஜன.4 தான் பள்ளிகள் திறப்பு..! மாணவர்கள்  குஷியோ குஷி..!

சுருக்கம்

தமிழகத்தில் பள்ளிகள் ஜனவரி 2ஆம் தேதிக்கு பதிலாக மூன்றாம் தேதி திறக்கப்படும் என ஏற்கனவே அரசு தெரிவித்து இருந்தது. 

மீண்டும் ஜன.4 தான் பள்ளிகள் திறப்பு..! மாணவர்கள் குஷியோ குஷி..! 

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை 2 ஆம் தேதி நடைபெற உள்ளதால் 4 ஆம் தேதிக்கு ஓத்தி வைத்து சுற்றறிக்கை அனுப்பி உள்ளது பள்ளிக்கல்வித்துறை

தமிழகத்தில் பள்ளிகள் ஜனவரி 2ஆம் தேதிக்கு பதிலாக மூன்றாம் தேதி திறக்கப்படும் என ஏற்கனவே அரசு தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் மீண்டும் ஒரு நாள் நீட்டித்து அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகள் ஜனவரி 4 ஆம் தேதி திறக்கப்படும் என சுற்றறிக்கையை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை அனுப்பி உள்ளது. மேலும் ஏற்கனவே அறிவித்தபடி கல்லூரிகளுக்கு ஜனவரி 1 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு,ஜன.2 திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது புது வருட பிறப்பு வர உள்ளதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த விடுமுறை நாட்களை மகிழ்ச்சியாக கழித்து வருகின்றனர். இந்த நிலையில் ஒரு நாள் நீட்டித்து ஜனவரி 4 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவித்துள்ளதால் மாணவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி ஏற்பட்டு உள்ளது. 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Soft Idli Tips : தட்டில் ஒட்டாமல் 'பஞ்சு' மாதிரி இட்லி வர சூப்பரான சில ஐடியாக்கள் இதோ!!
Spinach for Liver Health : இந்த கீரைய சாதாரணமா நினைக்காதீங்க! கல்லீரல் நோயை தடுக்கும் அருமருந்து