அடங்காத அண்ணாச்சி… அஜித் இடத்தைப் பிடிக்காமல் விட மாட்டேன் என சபதம் !!

By Selvanayagam P  |  First Published Apr 20, 2019, 9:11 AM IST

வந்துட்டேன்னு சொல்லு … திரும்ப வந்துட்டேன்னு சொல்லு… ரஜினியோட பட வசனம் இல்லங்க இது… எல்லாம் நம்ம சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி நடித்து வெளிவரவுள்ள விளம்பரப் படம் தான். கோடை விடுமுறையை முன்னிட்டு சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி நடித்து வெளிவரவுள்ள இந்த விளம்பரப்படத்தில் அண்ணாச்சி பட்டய கிளப்பியுள்ளார்.


தீபாவளிக்கு  சந்தோஷம் இது சந்தோஷம்  என சரவணா ஸ்டார்ஸ் அண்ணாச்சி மற்றும் விஜய் டிவி சிரிக்கப் போவது யாரு ?  டீம் நடித்து வெளியான செம ஹிட் அடிச்சது. இதையடுத்து கோடை விடுமுறையை கொண்டாடும் விதமாக அடுத்து ஒரு விளம்பரத்தில் அஜித்தை மிஞ்சும் வகையில் அண்ணாச்சி செம ஸ்டைலாக நடித்துள்ளார். 

Tap to resize

Latest Videos

பொதுவாக முன்னணி நிறுவனங்கள், விளம்பர மாடல்களை கொண்டோ, நடிகர், நடிகைகளை கொண்டோதான், தங்களது விளம்பரங்களை நடிக்க வைப்பார்கள். வசந்த் அன்டு கோ உள்ளிட்ட சில நிறுவனங்களில் உரிமையாளர்களே விளம்பர படங்களில் தோன்றுவார்கள்.

சரவணா ஸ்டோர்ஸ்சை பொருத்தளவில் முதலில், விளம்பர மாடல்கள், சினிமா ஸ்டார்கள்தான் நடித்து வந்தனர். ஆனால், பின்னர்தான், 'தி லெஜெண்ட் சரவணா ஸ்டோர்' உரிமையாளர் சரவணன் அருள், விளம்பர உலகில் கால் பதித்தார்.

அதுவரை, 'தி லெஜெண்ட் சரவணா ஸ்டோர்' உரிமையாளர் எப்படி இருப்பார் என அறியாதவர்கள் எல்லோருமே, விளம்பர படத்தை பார்த்துதான், சரவணன் அருள் யார் என்பதை அறிந்து கொண்டனர். தமன்னா, ஹன்சிகா ஆகிய நடிகைகளுடன் சரவணன் அருள் நடித்த விளம்பரப் படங்கள் பட்டிதொட்டியெங்கும் சென்று சேர்ந்தன.

முதலில் அந்த விளப்ரத்தைப் பார்த்து பலரும் கிண்டல் செய்யத் தொடங்கினர். ஆனால் அவர் அடுத்து அடுத்து நடித்து வந்த விளம்பரப் படங்கள் பெரும் வெற்றி பெற்றதையடுத்து அவருக்கென ரசிகர்கள் கூட்டம் பெருகத் தொடங்கியது.

உழைப்பை மட்டும் நம்பினால் போதும், உருவம் என்பது ஒரு பொருட்டல்ல என்பதை சரவணம் அருள் எடுத்துக் காட்டாக விளங்கத் தொடங்கினார். அடுத்து அவர் சினிமாவிலும் கால் பதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதே நேரத்தில் அண்ணாச்சி வியாபரத்தில் மட்டுமல்ல, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கினார்.

அனைத்துத் தரப்பினரையும் அசத்தும் வகையில் அவர்  நடித்து வரவுள்ள இந்த விளம்பரப் படம் நிச்சயமாக செம ஹிட் அடிக்கும். போற போக்கைப் பார்த்தால் இவர் அஜித்துக்கே டஃப் கொடுப்பார் போல !!

click me!