சமோசா கடை நடத்தி ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிய இளைஞர் !! வருமான வரித்துறை நோட்டீஸ் !!

By Selvanayagam PFirst Published Jun 25, 2019, 9:50 PM IST
Highlights

உத்தரபிரதேச மாநிலத்தில் இளைஞர் ஒருவர் சமோசா மற்றும் கச்சோரி கடை நடத்தி ஆண்டு ஒன்றுக்கு 1 கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டியுள்ளதையடுத்து வருமான வரித்துறையினர் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

உத்தரபிரதேசம் மாநிலம் அலிகார் பகுதியில்  முகேஷ் என்பவர்  கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு முகேஷ் கச்சோரி என்ற சிறிய வகை சமோசா  கடை ஒன்றை தொடங்கினார். இந்த கடைக்கு நாள் ஒன்றுக்கு 500க்கும் மேற்பட்டோர் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

இவரது கடையின் ஸ்பெஷலே, ஒரு முறை கச்சோரி  சாப்பிட தொடங்கி விட்டால் வாடிக்கையாளர்கள், தினமும் வந்து சாப்பிடாமல் செல்ல மாட்டார்கள்.  அந்த அளவுக்கு நேர்த்தியாகவும், ருசியாகவும் கச்சோரி, சமோசா ஆகியவற்றை தயாரிப்பதே ஆகும்.

இவர் தனது கடையின் வருமானத்தை வங்கியில் போட்டு வைத்துள்ளார். இந்நிலையில் வருமான வரித்துறையினர் சிலர் முகேஷின் கடைக்கு அருகே உள்ள கடையில் அமர்ந்து அவரது வியாபாரம் குறித்து  கண்காணிக்கத் தொடங்கினார். 
 
இதில் முகேஷ், ஆண்டுக்கு ரூ.60 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை லாபம் பார்க்கிறார் என்பது தெரிய வந்தது.  ஜிஎஸ்டி வந்த பின்னரும்  முகேஷ் தனது கடையை பதிவு செய்யாமல் இருந்துள்ளார். 

இதையடுத்து களத்தில் இறங்கிய  வருமான வரித்துறை அவருக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது.  ஆனால் படிக்காத பாமரனாகிய முகேஷ் தனக்கு  இதுப்பற்றி எல்லாம் தெரியாது. ஆனால்  12  ஆண்டுகளாக  இந்த கடையை நடத்தி வருவதாக கூறினார். 

வாழ்வதற்காக மட்டுமே இந்த கடையை ஆரம்பித்து, மக்களின் வரவேற்போடு ஓட்டிக் கொண்டிருக்கிறேன். இப்படி சில முறைகள் உள்ளன என்பது பற்றி யாரும் என்னிடம் எடுத்துரைத்தது இல்லை’ என முகேஷ் கூறினார். 

இது தொடர்பாக விசாரணை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் முகேஷ் தனது கடையின் வருமானம் குறித்து ஒப்புக் கொண்டார். மேலும் அவர் கேஸ், சமையல் பொருட்கள் போன்றவற்றிற்கு எவ்வளவு செலவிடுகிறார்? என்கிற முழு விவரத்தை கொடுத்துள்ளார். இது குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என தெரிவித்தனர்.  

click me!