ஒரே ராசியில் திருமணம் செய்துக்கொண்டால் வாழ்கை எப்படி இருக்கும்...?

 
Published : May 11, 2018, 07:51 PM ISTUpdated : Sep 19, 2018, 02:21 AM IST
ஒரே ராசியில் திருமணம் செய்துக்கொண்டால் வாழ்கை எப்படி இருக்கும்...?

சுருக்கம்

same zodiac marriage life

ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு தனிச்சிறப்பு இருக்கும். மேலும் நட்சத்திரம் குறித்து அவர்களுடைய குணாதிசயம் சற்று வேறுபட வாய்ப்புள்ளது. ஒரே ராசியை சேர்த்தவர்கள் திருமண பந்தத்தில் இணைந்தால் அவர்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கும். என்பது குறித்து ஜோதிடம் கூறும் தகவல் என்ன? என்பதை பார்ப்போம். 

மேஷம் ராசிகர்கள் உணர்ச்சி பூர்வமாகப் பேசி அறிவு பூர்வமாக முடிவெடுப்பவர்கள். இவர்கள் தான் செய்வதே சரி என்று நினைப்பவர்கள். இந்த ராசி ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டால், இவர்களின் உறவில் தொடர் பிரச்னை, சண்டை, சச்சரவு ஏற்பட வாய்ப்புள்ளது. இருப்பினும் ஒருவரை ஒருவர் அனுசரித்து நல்லபடியாக வாழ்வார்கள்.

ரிஷபம் ராசிகார்கள் விடாமுயற்சியும், லட்சியத்தையும் நோக்கிப் பயணிப்பவர்கள். இந்த ராசியில் உள்ள ஆணும், பெண்ணும் இணையும் போது இவர்களின் எண்ணங்கள், கருத்துகள் ஒரே மாதிரியானதாக இருக்கும். வாழ்க்கையை ஈடுபாட்டுடனும், உற்சாகத்துடனும் வாழ்வார்கள்.

மிதுனம் ராசிகாரகள் மகிழ்ச்சியான நேரத்திலும் எல்லை மீறாதவர்கள். இந்த ராசி ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டால், இவர்களின் உறவில் ஈர்ப்பு இருக்கும். ஆனால், இவர்களில் ஒருவர் ஈர்ப்புடன் இருந்தால், மற்றொருவர் சமநிலை இன்றி காணப்படுவார்.

கடகம் ரசிகர்கள் யாருக்காகவும் தன் குறிக்கோளை மாற்றிக் கொள்ளாத ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டால், இவர்கள் உணர்ச்சிப்பூர்வமான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஒருவர் மற்றொருவருடைய உணர்வைப் புரிந்து நடந்து கொள்வார்கள். வாழ்க்கை கரும்பாய் இனிக்கும்.

சிம்ம ராசிக்காரர்கள், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசத் தெரியாதவர்கள் இந்த ராசி ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டால், இவர்களின் மத்தியில் முதலில் நிற்பது முன்கோபமாக தான் இருக்கும். இதனால், ஒருவருக்கு ஒருவர் மதிப்பு அளிப்பது, பொறுமையுடன் வாழ்க்கை நடத்தினால் பிரச்னைகள் குறையும்.

கன்னி ராசிகாரகள் காத்திருந்து காய் நகர்த்துவதில் வல்லவர்கள் இந்த ராசி கொண்ட ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டால், இவர்கள் ஒருவர் மீது ஒருவர் அதிக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். ஒருவருடைய மேன்மைக்கு மற்றொருவர் உறுதுணையாகத் திகழ்வார்கள்

துலாம் ராசிக்காரர்கள் வெற்றி நோக்குடன் செயலாற்றுபவர்கள் அன்பர்கள் இந்த ராசி கொண்ட ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டால், இவர்கள் தங்களுக்குள் செய்யும் தவறுகளை வெளிப்படையாக ஒப்புக் கொள்வார்கள். ஒருவருக்கொருவர் நன்கு புரிந்துகொண்டால் இவர்களின் உறவில் பிரிவு உண்டாகாது.

விருச்சிக ராசிக்காரர்கள் சாதனைப் படைக்கும் மனம் கொண்டவர்கள்  இந்த ராசி கொண்ட ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டால், இவர்கள் இருவர் மத்தியில் ஈர்ப்பும், கவர்ச்சியும் அதிகமாக இருக்கும். ஆனால், இவர்களின் வாழ்வில் அடிக்கடி சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டு உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

தனுசு ராசிக்காரர்கள் எடுத்த காரியத்தை திறமையுடன் முடிக்கும் இந்த ராசி ஆண் பெண் திருமண பந்தத்தில் இணையும் போது ஒற்றுமையாக காணப்படுவார்கள். இவர்கள் ஒருவருக்கொருவர் அதிக நேரத்தைச் செலவிட வேண்டும் என்று விருப்புவார்கள். ஆரோக்கியமான விவாதம், உற்சாகத்துடன் தங்களின் கருத்துகளை பகிர்ந்து கொள்வார்கள்.

மகரம் ராசிக்காரர்கள் சுறுசுறுப்புடன் பணிகளை செய்து முடிக்கும் திறன் படைத்தவர்கள் இந்த ராசி ஆண், பெண் இணையும் போது ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்வார்கள். இதனால் இவர்களின் உறவு சிறப்பாக இருக்கும்.

கும்பம் ராசி கொண்ட ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டால், இவர்கள் ஒருவரை ஒருவர் சகித்துக் கொண்டு வாழும் திறன் கொண்டவராக இருப்பார்கள்.

தன்னலமற்ற மீன ராசி கொண்ட ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டால், இவர்கள் இருவேறு பார்வைகள் கொண்டவர்கள். தனித்துவம் வாய்ந்தவர்களாக விளங்குவார்கள்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Moringa Water Benefits : முருங்கை தண்ணீருக்கு இவ்ளோ பவரா? தினமும் '1' கிளாஸ் குடிச்சா உடல்ல இந்த மாற்றங்கள் நடக்கும்
UTI in Children : குழந்தைகளுக்கு சிறுநீர் தொற்று வர வாய்ப்பிருக்கு! இந்த அறிகுறிகள் வந்தா கவனமா பார்த்துக்கங்க