சீரடி சாய்பாபா - விற்கே பிடித்த கோவில் எது தெரியுமா..?

By thenmozhi gFirst Published Sep 6, 2018, 5:22 PM IST
Highlights

சீரடி சாய்பாபாவிற்கு உலகம் முழுவதும் பக்தர்கள் உண்டு. ஒவ்வொரு கோவில்களும் தனி சிறப்பு வாய்ந்தது. அந்த வகையில் சீரடியில் அமைந்துள்ள சாய் பாபா கோவில் என்றால், வாழ்கையில் ஒரு முறையாவது  அந்த கோவிலுக்கு சென்று வர வேண்டும் என்ற எண்ணம் கண்டிப்பாக வரும்.

சீரடி சாய்பாபாவிற்கு உலகம் முழுவதும் பக்தர்கள் உண்டு. ஒவ்வொரு கோவில்களும் தனி சிறப்பு வாய்ந்தது. அந்த வகையில் சீரடியில் அமைந்துள்ள சாய் பாபா கோவில் என்றால், வாழ்கையில் ஒரு முறையாவது அந்த கோவிலுக்கு சென்று வர வேண்டும் என்ற எண்ணம் கண்டிப்பாக வரும்.

துவாரகாமாயி மற்றும் சாவடி இவை இரண்டுக்கும் இடையில் அமைந்துள்ளது தான் மாருதி கோவில் இங்கு ஆஞ்சநேயர் செந்தூரம் பூசியவாறு இருப்பார். இந்த கோவிலுக்கு தான் பாபா அடிக்கடி செல்வாராம். ஆஞ்சநேயர் கோவில் முன் நின்று தன் கைகளை உயர்த்தி மந்திரங்களை சொல்வாராம் பாபா.

பின்னர், சாபாபா மகாசமாதி அடைந்த பிறகு இந்த ஆலயமும் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. பாபாவிற்கே பிடித்த  கோவில் இது என்பதால் பக்தர்கள் அதிகஅளவில் இங்கு வந்து செல்வது உண்டு.


 
கண்டோபா ஆலயம் 

பாபா சீரடி வந்தபோது அந்த ஊர் சாதாரணமாக இருந்ததாம். அங்கு  கண்டோபா ஆலயம்  உள்ளது. இந்த ஆலயத்தின் கருவறையில் கண்டோபா உள்ளார். இந்த கோவில் பாபாவுக்கு மிகவும் பிடித்த கோவில். இங்கிருந்த கண்டோபா ஆலய பூசாரி மகல்சாபதி பாபாவை பார்த்து, சாய் என்று அழைத்து உள்ளார். பாபாவிற்கு பிடித்த கண்டோபா ஆலயம் இருந்ததால், இங்கேயே குடி இருக்க ஆசைப்பட்டார்.ஆனால் ஆலய பூசாரியாக இருந்த மகல்சாபதியோ, பாபாவை கண்டோபா கோவில் உள்ளேயே விடவில்லையாம். 

வேப்ப மரத்தடியில் பாபா 

அதன்பின் பாபா, சீரடிக்கு சென்று வேப்ப மரத்தடியில் அமர்ந்து உள்ளார். பின்னர் தான் சீரடி சாய்பாபா  மிகவும் பிரசித்தி பெற்றது. கண்டோபா ஆலயத்திற்கு பாபா வந்து சென்றதன் நினைவாக பக்தர்கள்  அங்கும் வந்து செல்கின்றனர். சீரடிக்கு வரும் பக்தர்களுக்கான தங்கும் விடுதிகள் அதிக அளவில் இந்த கண்டோபா ஆலயப் பகுதியில் கட்டப்பட்டு உள்ளது.

எனவே சீரடிக்கு வரும் பக்தர்கள் கண்டோபா கோவிலுக்கு சென்று வருவது குறிப்பிடத்தக்கது.   

click me!