வியாச முனிவர் அன்றே கூறிய "3 முக்கிய அறிகுறி"..! இது "தென்பட்டால்" உலகிற்கே பேரழிவு..!

By thenmozhi gFirst Published Sep 6, 2018, 1:13 PM IST
Highlights

ராமாயணம் மற்றும் மகா பாரதத்தில் இரண்டு போர்களை பற்றி விரிவாக கூறப்பட்டு உள்ளது. நேர்மையை நிலைநாட்ட கடவுளால் நடத்தப்பட்ட தெய்வீக நாடக போர் என்றும் ஓரு சிலர் நம்புகின்றனர்.  

ராமாயணம் மற்றும் மகா பாரதத்தில் இரண்டு போர்களை பற்றி விரிவாக கூறப்பட்டு உள்ளது. நேர்மையை நிலைநாட்ட கடவுளால் நடத்தப்பட்ட தெய்வீக நாடக போர் என்றும் ஓரு சிலர் நம்புகின்றனர்.  

முன்பே அறிந்த ஒரு விஷயம்..!

மகாபாரதத்தில், வியாச ரிஷி அரச குளத்தில் நடக்கப்போகும் விரிசலை முன்னதாகவே அறிந்து அதனை வெளிப்படுத்தி இருப்பார். உலகில் நடக்கும் சில விஷயங்களை பார்த்த, அவர் திருதராஷ்டிரன் தன் மகன்களையும், ராஜ்யத்தையும் முழுவதுமாக இழந்து விடுவார் என முன்னதாகவே தெரிவித்து இருந்தார்.

அதுமட்டுமல்லாமல், வரப்போகும் யுத்தம் மிகவும் பயங்கரமாக இருக்கும் என்றும், மகரிஷி வியாசர் வரப்போகும் யுத்தம் மிகவும் பயங்கரமானதாக இருக்கும், சுற்றி இருக்கும் அனைத்தையும் அழித்து விடும் என்றும் கூறினார். அவர் தனது தெய்வீகப் பார்வையை திருதராஷ்டிரனுக்கும் அருளி, உலகில் ஏற்படப்போகும் பேரழிவை பற்றி அவருக்கு தெரிவிக்க விரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பின்னர், இந்த சமயத்தில் சஞ்சயன், வியாசரிடம் வரப்போகும் பயங்கரமானதாக யுத்தத்தை சமாளிக்க என்ன செய்ய வேண்டும் என கேட்கிறார். இதற்கு பதில் அளித்த வியாசர், நான் குறிப்பிடும் சில அறிகுறிகள் எப்போது இந்த பூமியில் தென்படுகிறதோ அப்போது இந்த உலகம் அழிவை சந்திக்கும் என குறிப்பிட்டு  உள்ளார்.

ஒரே ஆண்டில்,அடிகடி பூகம்பம் வருவது, அதே ஆண்டில் தொடர்ந்து கிரகணங்கள் ஏற்பட்டால் இந்த பூமியில் விரைவில் பேரழிவு ஏற்படும் என தெரிவித்து உள்ளார். 

நல்ல அறிகுறி அல்ல
 
ஒவ்வொரு மாதமும் அமாவாசை கிருஷ்ண பக்க்ஷத்தின் பதின்மூன்றாம் நாள் வரும். ஆனால் அதற்கு மாற்றாக கிருஷ்ண பக்க்ஷத்தின் பதினாறாம் நாள் அமாவாசை வந்தால் ஏதோ கெடுதலுக்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.

இதேபோன்று, இமாலயம் கைலாசம் உள்ளிட்ட இடங்களில் வழக்கத்தை விட அதிகமாக அடிக்கடி பனிக்கட்டிகள் உடைந்தால், ஏதோ இயற்கை பேரழிவை சந்திக்க நேரிடும் என்பதை உணர்ந்துக்கொள்ள   வேண்டும் என்கிறது புராணம். 

பௌர்ணமி நிலவு
 
அமாவாசை மட்டுமல்ல, பவுர்ணமி பிராகாசமும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பவுர்ணமிக்கு எப்போதும் நிலா பிரகாசமாக இருக்கும். ஆனால் எப்போது இயற்கை மாற்றம் மற்றும் பேரழிவு ஏற்பட உள்ளதோ அப்போது பவுர்ணமியன்று  வழக்கத்தை விட, பிரகாசமாக தோன்றும்.

அதுமட்டும் அல்லாமல், அந்த பவுர்ணமியின் வெளிச்சம் பூமியை வந்தடைய இடையில் ஏதாவது தடங்கல் மற்றும் இடையூறு இருந்தால், ஏதோ அசாதாரண நிகழ்வு நடக்கப்போகிறது என்பது பொருள்.

click me!