பாதுகாப்பான  பண பரிவர்த்தனை  மேற்கொள்வது எப்படி ....?

First Published Dec 24, 2016, 3:22 PM IST
Highlights


 பாதுகாப்பான  பரிவர்த்தனை  மேற்கொள்வது எப்படி ....?

கருப்பு பண  ஒழிப்பு  நடவடிக்கையாக, பழைய  ரூபாய் நோட்டுகள் செல்லது என மோடி அறிவித்ததையடுத்து தற்போது மக்கள்  தங்கள்  கையில் இருந்த அனைத்து பணத்தையும்  தங்கள் வங்கி கணக்கில்  செலுத்தினர்.

தற்போது,  வங்கி கணக்கில் உள்ள  பணத்தை கூட எடுக்க  முடியாத அளவுக்கு ,  மக்களுக்கு  சிரமம்  உள்ளது.  இந்நிலையில்  டிஜிட்டல் இந்தியாவை   நோக்கி  பயணிக்கும்  நாம்,  அனைவரும்  கிரெடி கார்டு   மற்றும் டெபிட் கார்டு  பயன்படுத்தும்  தருணத்தில்  உள்ளோம்.

இதனை  தற்போது  மத்திய  அரசும்  தொடர்ந்து  வலியுறுத்தி  வருகிறது. இவ்வாறு பரிவர்த்தனையில்  ஈடுபடும்போது, ரொக்கமில்லா  பரிவர்த்தனை எந்த அளவுக்கு  பாதுகாப்பானது  என  உறுதி  செய்து  கொள்வது நல்லது.

டெபிட் கார்டு பயன்படுத்தும் போது கவனிக்க  வேண்டியது.......

1.     பொதுவாக  நாம்  இரண்டு  அக்கௌன்ட்  வைத்திருப்பது  ரொம்ப  நல்லது.

2.     ஒரு அக்கௌண்டில் , தேவையான  பணத்தை   வைத்துக்கொள்வது  நல்லது. இந்த அக்கௌன்டிலிருந்து  தேவை இல்லாமல்  பணம்  எடுப்பதை  தவிர்க்கவும்.

3.     மற்றொரு  அக்கௌன்டில் ,  அன்றாட  தேவைக்கு  ஏற்ப , ஒரு  குறிப்பிட்ட  தொகையை  மட்டும் ,  குறிப்பிட்ட  நாட்களுக்கு  தேவையான அளவு    வைத்துக்கொள்ளவும்.  

4.      இவ்வாறு  நாம்  பயன்படுத்தும் போது,   பாதுகாப்பாக  உணர முடியும் . நாம்  அடிக்கடி   பயன்படுத்தும் டெபிட்  கார்டில்  குறைந்த  அளவே  பணம்  வைத்துகொண்டு,  மற்றொரு  வங்கி கணக்கில்  பணத்தை  பாதுகாப்பாக  வைப்பது   நல்லது   என  வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

5.     இதன் மூலம்,  நாம்  பயன்படுத்தும்   டெபிட்  கார்டின் , ரகசிய  எண்ணை  யாராவது  திருடினாலும்,பாதிப்பு  அந்த  அளவுக்கு  இருக்காது.  

 

  

click me!