டிஜிட்டலுக்கு  மாறிய “ முதல் கிராமம்”  அறிவிப்பு .....!!!

First Published Dec 24, 2016, 3:17 PM IST
Highlights


டிஜிட்டலுக்கு  மாறிய “ முதல் கிராமம்”  அறிவிப்பு .....!!!

தெலுங்கானாவில் உள்ள சித்திபேட் மாவட்டத்தை சேர்ந்த “இப்ராஹிம்பூர்”   என்ற கிராமம் முழுவதுமாக பணமில்லா பரிவர்த்தனை என்ற டிஜிட்டல் முறைக்கு மாறியுள்ளது  என்பது  குறிப்பிடத்தக்கது. இங்கு 1200   பேர் வாழ்கின்றனர் .

தென்னிந்தியாவை பொறுத்தவரை  முழுவதுமாக   டிஜிட்டலுக்கு மாறிய முதல்   கிராமம்  இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கிராமத்தில் உள்ள அனைத்து பெரிய மற்றும் சிறிய  கடைகளில்  கூட , கிரெடிட்  கார்டு  மற்றும்  டெபிட்  கார்ட்  பயன்படுத்தும் விதமாக , ஸ்வைப்  மெஷினை  பயன்படுத்துகின்றனர்.

தெலுங்கானா மாநில  முதல்வர்  சந்திரசேகர்  ராவ் , இது குறித்து தன் கருத்தை தெரிவித்துள்ளார். சிறிய டீ கடை முதல் அனைத்து  கடைகளிலும்   டிஜிட்டல் பரிவர்த்தனை  மேற்கொள்ளும்  கிராமமாக “இப்ராஹிம்பூர்”    கிராமம்  மாறியுள்ளது என்றும், இந்த  கிராமம்  இந்தியாவில் உள்ள மற்ற  கிராமங்களுக்கு   எடுத்துக்காட்டாக  விளங்கும்  எனவும் தெரிவித்தார்.

click me!