செல்லாத நோட்டில் வரி செலுத்த  கடைசி  வாய்ப்பு...!!!  வரும் 3௦ ஆம் தேதியே கடைசி....!!!!

First Published Dec 24, 2016, 12:20 PM IST
Highlights


செல்லாத நோட்டில் வரி செலுத்த  கடைசி  வாய்ப்பு...!!!  வரும் 3௦ ஆம் தேதியே கடைசி....!!!!

கருப்பு பணம் வைத்திருப்பவர்கள், வரியை செலுத்த  பழைய 500, 1000 ஆயிரம்  ரூபாயை  செலுத்தலாம்  என  மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதன்படி, கருப்பு பணம்  வைத்திருபவர்கள் , வரி  மற்று அபராதம்  செலுத்த, கரீப்  கல்யாண்  திட்டத்தில்  டெபாசிட்  செய்ய ,  பழைய  நோட்டுகளையே பயன்படுத்தி கொள்ளலாம்  என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  கருப்பு  பணத்தை  வைத்திருப்பதை  ஒப்புக்கொள்பவர்கள், வரி மற்றும்  அபராதமாக  50  சதவீதம்  செலுத்த வேண்டும்  எனவும்  தெரிவிக்கப்பட்டு  இருந்தது. மேலும், 25 சதவீதத்தை கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் முதலீடு செய்ய வேண்டும் என்றும்,  4 ஆண்டுகளுக்கு இந்த முதலீட்டை எடுக்க முடியாது எனவும்  ஏற்கனவே   அறிவிக்கப்பட்டு  இருந்தது.

இந்நிலையில்  இதற்கு வட்டியும் வழங்கப்பட மாட்டாது என்பது   குறிப்பிடத்தக்கது.

வரும் மார்ச்  மாதம்  வரை அமலில்  இருக்கும் இந்த  திட்டத்தில், டெபாசிட்  செய்ய  விருப்பம்  உள்ளவர்கள் ,  அவர்களுக்கு  வழங்கப்பட்டுள்ள  கடைசி  வாய்ப்பாக   வரும் 3௦  ஆம்   தேதிக்குள், தங்களிடம் உள்ள பழைய  ரூபாய் நோட்டுகளையே  பயன்படுத்தி  டெபாசிட்  செய்து கொள்ளலாம்  என  மத்திய  அரசு தெரிவித்துள்ளது.

 

 

 

click me!