Benefits of Honey: இது தெரிந்தால் இனி தேன் சாப்பிடுவதை நிறுத்த மாட்டீர்கள்...தேனின் 10 மருத்துவ நன்மைகள்...

By Anu Kan  |  First Published May 25, 2022, 3:36 PM IST

Benefits of Honey: ஈஷா யோக மையத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறிய தேனின் ஆரோக்கியமான நன்மைகள் என்னென்னெ என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.


இயற்கை நமக்கு தந்த சிறப்பாக அற்புதங்களில் ஒன்று தேன்.4000 ஆண்டுகள் பழமையான  தேன் ஒரு திரவம் அதன் வளமான மருத்துவ பண்புகள் மற்றும் சுகாதார நன்மைகள் காரணமாக இன்றும் அதன் முக்கியத்துவத்தைத் தொடர்கிறது. 

சத்குரு கூறிய தேனின் ஆரோக்கியமான நன்மைகள்:

Tap to resize

Latest Videos

பூக்களில் காணப்படும் வழுவழுப்பான திரவத்தில் இருந்து தான் தேன் உருவாகிறது. இதில் உள்ள பூவின் மணம் போகும்படி இரும்பை நன்கு காய வைத்து காய்ச்சிய தேன் தயாரிப்பார்கள். இது 2 ஆண்டுகள் வரை கெடாமல் இருக்கும். சுமேரியர்களின் தங்கள் மருத்துவ சிகிச்சைகளில் கிட்டத்தட்ட 30% தேனை பயன்படுத்தினர்.

 சித்தா மற்றும் ஆயுர்வேதத்தில்  தேன் துணை மருந்தாக சேர்க்கப்படுகிறது. ஏனெனில் தேனுக்கு இயல்பிலேயே இரத்தத்தில் கலக்கும் தன்மை உள்ளது. மனிதர்கள் இன்று தேனை பல வடிவத்தில் பயன்படுத்துகின்றனர். சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை தேன் ஆரோக்கியமான மாற்றாக மாற்றுகிறது. தேனின் ஆரோக்கியமான நன்மைகள் என்னென்னெ என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

1. தேன் உங்கள் இரத்தத்திற்கு நல்லது:

வெதுவெதுப்பான நீரில் தேனைக் கலந்து குடித்தால், அது இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் (RBC) எண்ணிக்கையில் நன்மை பயக்கும். இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜனை உடலின் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்வதற்கு சிவப்பு இரத்த அணுக்கள் முக்கிய காரணமாகும். தேன் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை உயர்த்துகிறது. இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகை, மூச்சுத் திணறல் மற்றும் சில நேரங்களில் மனச்சோர்வு மற்றும் பிற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.  

2. நீரிழிவு அல்லது சர்க்கரை நோய்:

நீரிழிவு அல்லது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு தேனில் இருக்கும் குளுக்கோஸ் அளவு 45 முதல் 64 வரை மாறுபடுகிறது. இது சராசரியான அளவு தான். தேனை உட்கொள்வதால், உடலில் இன்சுலின் அளவு அதிகரித்து, இரத்த சர்க்கரையின் அளவு குறையும் என்று பல ஆய்வறிக்கைகள் கருத்து தெரிவிக்கின்றன. உடலில் இன்சுலின் அளவை சமநிலைப்படுத்த உதவும் C-பெப்டைடு சத்தினை அதிகரிக்க தேன் பயன்படுகிறது. ஆகையால், சர்க்கரை நோய் உள்ளவர்கள், ஒரு அரைக்கரண்டி தேனினை தேநீர், ஓட்ஸ் உணவு அல்லது யோகார்ட்டில் கலந்து உட்கொள்ளலாம்.

3. யோகா பயிற்சி செய்பவர்களுக்கு தேன் நல்லது:

யோகப் பயிற்சிகளை மேற்கொள்பவர்களுக்கு, தேன் உட்கொள்வது இரத்த வேதியியல் சமநிலையைக் கொண்டுவருகிறது. தேனை தவறாமல் உட்கொள்வது, உடலுக்கு நன்மை தருகிறது. மேலும், நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். யோக பயிற்சியைத் தொடங்கும் முன் காலையில் தேன் கலந்த வெதுவெதுப்பான நீரை எடுத்துக்கொள்வது,  நல்லது.

4. ஆற்றலை அதிகரிக்கும்

தேனில் பல்வேறு வகையான சர்க்கரை மூலக்கூறுகள் உள்ளன, குறிப்பாக குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் போன்றவை உடலுக்கு ஆற்றல் வழங்கும். அதுமட்டுமின்றி, தூய்மையான தேனில், என்சைம்கள், புரதங்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் ஆகியவை குறைந்த அளவே காணப்படும்; இது ஒருவரின் உடலுக்கு தேவையான ஆற்றல் அளவை சரிவர பங்களிக்க உதவுகிறது. உடற்பயிற்சி அல்லது உடல் உழைப்பு அதிகமாக இருக்கும் சமயங்களில், குளுகோஸிற்கு பதிலாக தேனை பயன்படுத்தலாம். 

5. தேன் செரிமானத்திற்கு உதவுகிறது

தேன் ஒரு லேசான மலமிளக்கியாக இருப்பதால், மலச்சிக்கல், வீக்கம் மற்றும் வாயுவைக் குறைக்க உதவுகிறது. தேனில் காணப்படும் பிஃபிடோ பாக்டீரியா மற்றும் லாக்டோபாகில்லி போன்றவை செரிமானத்திற்கு உதவுகிறது, நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் ஒவ்வாமைகளை குறைக்கிறது. சர்க்கரைக்குப் பதிலாக தேனைப் பயன்படுத்துவது பூஞ்சைகளால் உற்பத்தி செய்யப்படும் மைக்கோடாக்சின்களின் குடலில் உள்ள நச்சு விளைவுகளைக் குறைக்கிறது.

6. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

 இது நாம் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு நோய் தீர்ப்பதில் சிறந்த காரணியாக திகழ்கிறது. குறிப்பாக மனுகா தேனில் ஆன்டி பாக்டீரியா செயல்திறன் கொண்ட மெத்தில் கிளையோக்சல் அதிகளவு காணப்படுகிறது. இந்த மெத்தில் கிளையோக்சல் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. உடலின் நோயெதிர்ப்பு செல்கள், நோயெதிர்ப்பு செயல்பாடுகளுக்கு அனுப்பும் இரகசிய தகவல்களான சைடோக்கின்களின் உற்பத்திக்கு மெத்தில் கிளையோக்சல் உதவுகிறது.

7. இதய ஆரோக்கியம்:

தேனில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் இதயத்தை பாதுகாக்க உதவும். இரத்தத்தில் கெட்ட கொழுப்பை கரைத்து ஆக்சிஜனேற்றத்தை உண்டு செய்யும் இணைந்த டயன் காரணிகள் போன்றவை உருவாவதை தடுக்க தேன் உதவுகிறது. இதன் மூலமாக இதய ஆரோக்கியம் தானாக மேம்படுகிறது.  

8. எலும்புகளை பலப்படுத்தும்

தேன் மற்றும் கால்சியம் சத்துக்கள் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க உதவுகின்றன. தேனை தேவையான அளவு எடுத்துக் கொள்பவர்களின் உடலில் கால்சியத்தை உறிஞ்சும் திறன் அதிகரித்து காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். உணவு முறை சார்ந்த காரணிகளில், கால்சியம் மற்றும் வைட்டமின் டி சத்துக்களை அதிகம் உறிஞ்சும் திறன் தேனில் தான் காணப்படுகிறது.

9. காயங்கள் மற்றும் புண்கள்: 

காயங்கள் மற்றும் குறிப்பாக தீக்காயங்கள் ஆகியவற்றின் மீது தேனை தடவுவது, அவற்றில் காணப்படும் இறந்த, தேவையற்ற செல்களை நீக்கி, தழும்புகள் மற்றும் சுருக்கங்கள் (மூட்டுக்களில் ஏற்படும் குறைபாடு அல்லது இறுக்கம்) ஏற்படாமல் தடுக்க உதவும்

10. குழந்தைகள் நன்றாக தூங்குவதற்கு தேன் உதவுகிறது

குழந்தைகள் இருக்கும் வீடுகளில் கண்டிப்பான தேனுக்கும் ஓர் இடமுண்டு. அதற்கு காரணம் தேனில் உள்ள மருத்துவ குணங்கள் தான். பல ஆய்வுகளின் முடிவுகள் தேன் குழந்தைகளின் தூக்கத்தை மேம்படுத்தும் என்பதை சுட்டி காட்டுகிறது. பெற்றோரின் கருத்துகளின் அடிப்படையில், தேன் இரவில் குழந்தைகளிடையே இருமலைக் குறைத்து, அவர்கள் நன்றாக தூங்க உதவுகிறது  என்கின்றனர். 

மேலும் படிக்க...Weight Gain Reasons: உடல் எடை அதிகரிக்க இப்படி ஒரு காரணமா..? வியப்பூட்டும் அறிவியல் உண்மைகள்...

click me!