Breast Cancer: அலர்ட்...மார்பக புற்றுநோய் ஆபத்து பெண்களுக்கு மட்டுமா? ஆண்களை கலங்கடிக்கும் புதிய ஆய்வு முடிவு

By Anu KanFirst Published May 20, 2022, 3:36 PM IST
Highlights

Male Breast Cancer: மார்பாக புற்றுநோய் பெண்களை மட்டுமல்ல, ஆண்களையும் தாக்கும் அதுவும், குழந்தையில்லாத ஆண்களை அதிகம் தாக்கும் என்கின்றது அண்மையில் இங்கிலாந்தியில் நடத்திய சமீபத்திய ஆய்வு முடிவு.

மார்பாக புற்றுநோய் பெண்களை மட்டுமல்ல, ஆண்களையும் தாக்கும் அதுவும், குழந்தையில்லாத ஆண்களை அதிகம் தாக்கும் என்கின்றது அண்மையில் இங்கிலாந்தியில் நடத்திய சமீபத்திய ஆய்வு முடிவு. 

பொதுவாக புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளை சரியான நேரத்தில் கவனித்து சிகிச்சை பெற்றால் நோயின் தீவிரத்தை பெரிய அளவில் கொண்டு போகாமல் தவிர்க்கலாம். நோயின் தீவிரத்தை அறிந்து நாம் உடனடியாக மருத்துவரை அணுகுவது சிறந்தது. 

புற்றுநோய் வகைகள்:

மார்பக புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், எண்டோமெட்ரியல் புற்றுநோய் மற்றும் தோல் புற்றுநோய் ஆகியவை பெண்கள் சந்திக்கும் சில பொதுவான புற்றுநோய்களாக இருக்கின்றன.

பெண்களுக்கு மார்பக புற்றுநோய்:

 இதில், மார்பகப்புற்றுநோய் பொறுத்தவரை இந்தியாவில் ஒவ்வொரு 4 நிமிடத்திற்கும் ஒரு பெண் பாதிக்கப்படுகிறார். கடந்த 2021இல் மட்டும் உலக அளவில் 10 மில்லியன் பேர் புற்றுநோயால் உயிரிழந்துள்ளனர் என்று ஆய்வு முடிவு கூறுகிறது. இருப்பினும், ஆண் மார்பக புற்றுநோய் என்பது மிகவும் அரிதான ஒன்றாக இருந்தது. 

 ஆண்களை தாக்கும்  மார்பாக புற்றுநோய்:


 
இந்த நிலையில், மார்பாக புற்றுநோய் பெண்களை மட்டுமல்ல, ஆண்களையும் தாக்கும் அதுவும், குழந்தையில்லாத ஆண்களை அதிகம் தாக்கும் என்கின்றது அண்மையில் இங்கிலாந்தியில் நடத்திய ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

சமீபத்திய ஆய்வு முடிவு:

மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 2000 ஆண்களிடம் நடத்திய ஆய்வில், இதில் 19.2% பேருக்கு குழந்தைகள் இல்லாததும், 5.6% பேருக்கு மலட்டுத்தன்மை இருந்தது உறுதியாகியுள்ளது.  மேலும், குழந்தையில்லாத நிலைக்கும் மார்பக புற்றுநோய்க்கும் தொடர்பு இருப்பதும் ஆய்வில் உறுதியாகியுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க....Weight Gain Reasons: உடல் எடை அதிகரிக்க இப்படி ஒரு காரணமா..? வியப்பூட்டும் அறிவியல் உண்மைகள்...

click me!