Weight Gain Reasons: மாசடைந்த காற்றை சுவாசிப்பதால் உடற்பருமன் அதிகரிப்பதுடன், டைப் 2 நீரழிவு நோய் வரும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது என்று அமெரிக்காவின் சமீபத்திய ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.
மாசடைந்த காற்றை சுவாசிப்பதால் உடற்பருமன் அதிகரிப்பதுடன், டைப் 2 நீரழிவு நோய் வரும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது என்று அமெரிக்காவின் சமீபத்திய ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.
உடல் எடை அதிகரிப்பு என்பது, இந்த நவீன காலகட்டத்தில், பெரும்பாலானோர் சந்திக்கும் மிக பெரிய பிரச்சனையாக உள்ளது. உடல் எடை குறைய உடற்பயிற்சி செய்வது,கீடோ டயட், உணவில் கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், உடல் எடை குறைந்த பாடு இல்லை.
உடல் எடை குறைய மருத்துவர்கள் அட்வைஸ்:
நமது உணவுப் பழக்கங்களில் ஒரு சில மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம், உடல் எடையைக் குறைப்பது மட்டுமின்றி ஆரோக்கியமாகவும் வாழலாம் என்கின்றனர் மருத்துவர்கள். பழங்கள் மற்றும் காய்கறிகளைப் பச்சையாகச் சாப்பிடுவது போன்றவை நாம் அனைவருக்கும் தெரிந்த மிக முக்கிய டயட்டில் ஒன்றாகும்.
உடல் எடை அதிகரிக்க காரணங்கள்:
உடல் எடை குறையாமல் இருக்க மேற்கத்திய உணவுப் பழக்கம், அன்றாட பழக்க வழக்கங்கள், உடல் உழைப்பில்லாமை, தண்ணீர் குடிக்காமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டிருக்கிறது.
அமெரிக்க ஆய்வில் வெளிவந்த உண்மை:
இந்த நிலையில், உடல் எடை அதிகரிப்பிற்கு வித்தியாசமான காரணத்தை அமெரிக்க அறிவியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆம், அந்த ஆய்வின் படி மாசடைந்த காற்றை சுவாசிப்பதால் உடற்பருமன் அதிகரிப்பதுடன், டைப் 2 நீரழிவு நோய் வரும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது என்று தெரியவந்துள்ளது.
காற்றுமாசு:
காற்றுமாசு குறிப்பாக, அதிலுள்ள ஓசோன் குடலிலுள்ள நுண்ணுயிர்ச் சமநிலையை பாதித்து குறிப்பிட்ட சில வகை பாக்டீரியாக்களின் வளர்ச்சியை மட்டும் அதிகரிக்கிறது. இவை ஹார்மோன் மற்றும் இன்சுலின் சுரப்பை பாதித்து உடற் பருமன் அதிகரிக்க காரணமாகிறது என்கின்றனர். எனவே, நாம் ஒவ்வொருவரும் இயற்கையை பாதுகாப்போம்..சுத்தமான காற்றை சுவாசிப்போம்..! ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்குவோம் நண்பர்களே..