இன்று ரிஷபம் ராசிகளுக்கு அதிர்ஷ்ட காற்று வீசும்...வாழ்வில் வெற்றி நிச்சயம்...! இன்றைய 12 ராசிகளின் பலன்கள்....

Anija Kannan   | Asianet News
Published : May 20, 2022, 05:02 AM IST
இன்று ரிஷபம் ராசிகளுக்கு அதிர்ஷ்ட காற்று வீசும்...வாழ்வில் வெற்றி நிச்சயம்...! இன்றைய 12 ராசிகளின் பலன்கள்....

சுருக்கம்

Horoscope Today: ஜோதிடக் கணக்கீடுகளின் அடிப்படையில், குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு இந்த நாள் பொன்னான நாளாக இருக்கும். கிரகங்களின் மாற்றத்தால், அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

ஜோதிடக் கணக்கீடுகளின் அடிப்படையில், குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு இந்த நாள் பொன்னான நாளாக இருக்கும். கிரகங்களின் மாற்றத்தால், அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

மேஷம்: 

மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இன்று சிறப்பாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த இழுபறியான வேலைகள் சுலபமாக முடிவடையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். உங்கள் வாழ்வில் புதிய சிந்தனை தோன்றும். வாழ்வில் வெற்றி நிச்சயம். 

ரிஷபம்: 

ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிர்ஷ்ட காற்று வீசும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய நபர்களுடைய அறிமுகம் கிடைக்கும். பெண்களுக்கு சுறுசுறுப்பு காணப்படும். கணவன்- மனைவி உறவு மேம்படும். 

மிதுனம்: 

மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதில் இருக்கின்ற பயத்தை நீக்கி தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் வேலை கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மற்றவர்களுடைய வார்த்தையில் கவனம் தேவை. ஆன்மிக பயணம் மேற்கொள்வீர்கள்.

கடகம்: 

கடகத்தில் பிறந்தவர்களுக்கு இன்று உங்களுக்கு கூடுதல் பொறுமை அவசியம். தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைக்காதீர்கள். உங்களுடைய பணியில் மும்முரமாக ஈடுபடுங்கள். எதையும் நினைத்து வேண்டாம். உத்தியோகத்தில்வேண்டிய சலுகைகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள். 

சிம்மம்: 

சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் போராட்டம் இருக்கும். தெரியாதவர்களின் அறிமுகத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள். பெற்றோர்களின் ஆசி கிடைக்கும். பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் வலுவாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்பு நிறைவேறுவதில் இடையூறுகள் ஏற்படலாம். 

கன்னி: 

கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பலவீனத்தை அறிந்து செயல்படுவீர்கள். எதையும் செலவு செய்யக்கூடாது. ஆடம்பர செலவுகள் பொருளாதாரத்தை பிரச்சினைகள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு ராஜ தந்திரங்களை கற்றுக் கொள்ளும் பாக்கியம் கிடைக்கும். 

துலாம்: 

துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிறப்பு கணவன் தேவை. உங்களுடைய எண்ண அலைகளில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். பணம் பல்வேறு வழிகளில் வரும். 

விருச்சிகம்: 

விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் குதூகலம் காணப்படும். உற்றார், உறவினர்களின்  மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வெற்றி நிச்சயம். புதிய முதலீடுகள் செய்வதற்கு சிறந்த நாளாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் காணப்படும்.

தனுசு: 

தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பேச்சில் இனிமை கிடைக்கும். தேவையற்ற விஷயங்களில் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்ப உறவுகளுக்கு இடையே விட்டுக் கொடுத்துச் செல்லுதல் நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்கும். 

மகரம்: 

மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். எதிலும், பொறுமையுடன் இருப்பது நல்லது. அலட்சியம் இழப்புகளை ஏற்படுத்தும். பொருளாதார ஏற்றம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உழைப்பால் உயரக்கூடிய நாளாக இருக்கும். 

கும்பம்: 

கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்த்த ஒன்று கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் உயரக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். 

மீனம்: 

மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிறப்பாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உடன் பிறந்தவர்கள் ஆதரவு கிடைக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு புத்துணர்ச்சி தரக்கூடிய இனிய நாளாக இருக்கிறது. மனதிற்கு பிடித்த காரியங்கள் நிறைவேறும். 

மேலும் படிக்க....Sani Peyarchi 2022: ஜூன்5 ம் தேதி சனியின் வக்ர பெயர்ச்சி...ஆபத்தை சந்திக்கும் ராசிகள்...யோகம் பெறும் ராசிகள்..

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

Amla Benefits : நெல்லிக்காய் ஜூஸ் குடிக்குறது பெஸ்டா? அப்படியே சாப்பிடுவது நல்லதா? ஆரோக்கியத்துக்கு 'இதுவே' ஏற்றது
Soft Idli Tips : தட்டில் ஒட்டாமல் 'பஞ்சு' மாதிரி இட்லி வர சூப்பரான சில ஐடியாக்கள் இதோ!!