
கடந்த இரண்டு ஆண்டுகளாக கீட்டொஜெனிக் என்று சொல்லக்கூடிய கீட்டோ டயட் பெரும்பாலானவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. காரணம் உடல் எடையை கட்டுக்குள் வைக்க மற்றும் அதிக கொழுப்பு மற்றும் நீரிழிவு நோய்க்கான அறிகுறிகளைத்தடுக்க இந்த டயட் சிறப்பான பங்களிப்பை வழங்குகிறது.
கீட்டோ டயட்:
இந்த டயட் முறையை மேற்கொள்பவர்கள் மிகமிக குறைவான கார்போஹைட்ரேட் மற்றும் அதிக கொழுப்பை எடுத்துக் கொள்கிறார்கள். அதேசமயம் அதிக கொழுப்பு எடுத்துக்கொள்ளும் டயட் முறையை நீண்ட நாட்கள் பின்பற்றுவதும் சிறுநீரகத்தில் கல் உருவாதல் போன்ற வேறு விதமான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்கின்றனர் மருத்துவர்கள். மேலும், கர்ப்பிணி பெண்கள் செரிமான கோளாறு இருப்பவர்கள் இந்த டயட் முறையை மேற்கொள்ள வேண்டாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
பேகன் டயட்:
இந்த நிலையில், பேகன் என்கின்ற மற்றுமொரு புதிய டயட் சமீப காலமாக வைரலாகி வருகிறது. பேலியோ + வீகன் இணைந்ததுதான் பேகன் டயட் என்கின்றனர். பேகன் என்பது பெருன்பான்மையாக காய்கறிகள், பழங்கள் நிறைந்த டயட் முறையாகும்.
உணவு முறைகள்:
இதனுடன் நட்ஸ், சீட்ஸ் சால்மன் மீன் போன்றே ஆரோக்கிய கொழுப்புக்களை சாப்பிடலாம். இதய ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக டயட்டீசியன்கள் பேகனை பரிந்துரைக்கின்றனர். இருப்பினும், இதில், பால் உணவுகளுக்கு அனுமதி இல்லை என்பதால், இந்த டயட் எடுப்பவர்களுக்கு கால்சியம் குறைபாடு ஏற்படுகிறது. மேலும், இனிப்பு உணவுகளும் தவிர்க்கப்படுகிறது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.