திருமண விழாக்களில் முகூர்த்த கால் அல்லது பந்தக்கால் நடுவது ஏன்..? உங்களுக்கு தெரியாத ரகசியம் இதோ!!

By Kalai Selvi  |  First Published Apr 8, 2024, 4:21 PM IST

இல்லத்தில் திருமணம் நிச்சயக்கப்பட்ட நாள் முதல் திருமணம் முடியும் வரை பலவிதமான சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள் செய்யப்படும். அதில் ஒன்றுதான் முகூர்த்த கால் நடுதல் அல்லது பந்தக்கால் நடுவது ஆகும். இது நடுவது ஏன்? அது எப்படி வந்தது என்று இங்கே தெரிந்துகொள்ளலாம்.


பொதுவாகவே, திருமணம் என்றாலே  மணமகன், மணமகள் என இருவரது வீட்டிலும் மகிழ்ச்சி, ஆர்ப்பாட்டம் என்று ஒரே அமர்க்களமாக தான் இருக்கும். மேலும் வீட்டில் உறவினர்கள், நண்பர்கள் வருகையும், கேலி கிண்டலுமாக தான் இருக்கும். 

அதுபோல், இல்லத்தில் திருமணம் நிச்சயக்கப்பட்ட நாள் முதல் திருமணம் முடியும் வரை பலவிதமான சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள் செய்யப்படும். இந்த சடங்குகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது முகூர்த்தக்கால் நடுதல் அல்லது பந்தக்கால் நடுவது ஆகும். பொதுவாகவே, பெரும்பாலான இந்துக்களின் திருமணங்களில் பிரம்ம முகூர்த்தம் அல்லது ஏதேனும் முகூர்த்த நாளில் நல்ல நேரம் பார்த்து, திருமணத்திற்கு 5 நாட்களுக்கு முன்பு தான் பந்தக்கால் அல்லது முகூர்த்தக்கால் நடுவார்கள். அதுவும் மணமகன் மற்றும் மணமகள் தங்களது வீடுகளில் வடகிழக்கு பகுதியில் தான் பந்தக்கால் நடுவார்கள்.

Latest Videos

undefined

ஆனால், இந்த பந்தக்கால் எதற்கு நடுகிறார்கள் என்று இன்றுவரை பலபேருக்கு தெரியாது. இது குறித்து பெரியவர்களிடம் கேட்டால், அந்த காலத்தில், முன்னோர்கள் பின்பற்றிய வழிமுறையை தான் அப்படியே பின்பற்றி வருகிறோம் என்று சொல்வார்கள். சரி வாங்க இப்போது பந்தக்கால் எதற்காக நடப்படுகிறது என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்..

இதையும் படிங்க: இந்து திருமணத்தில் மணமகள் எப்போதும் மணமகனின் இடது பக்கத்தில் உட்காருகிறாள்.. ஏன்? உண்மையான காரணம் இதோ..

இறைவன் அருள்: இந்து மத திருமணத்தில், திருமணத்திற்கு முன்பே வீட்டின் முன்பு முகூர்த்தகால் அல்லது பந்தக்கால் நடுவது, மாவிலைத் தோரணம் கட்டுவது போன்றவை செய்வது வழக்கம். அதுவும் பந்தக்கால் நடுவதற்கு மூங்கில் கம்புகளை வாங்கி வந்து அதை சுத்தம் செய்து பின்பு மஞ்சள், குங்குமம் மற்றும் பூக்களால் அலங்கரித்து வடகிழக்கு மூலையில் நடுவார்கள். இந்த் திசையில் நடுவதுதான் வழக்கம். ஏனெனில், வடகிழக்கு மூலை ஈசான்ய திசை என்பதால், நடக்கவிருக்கும் திருமணம் இறைவன் அருளோடு,  மணமக்கள் இன்புற்று மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதைக் குறிப்பதற்காகவே பந்தக்கால் அல்லது முகூர்த்தக்கால் இந்த திசையில் நடப்படுகிறது.

பந்தக்கால் விழா தோன்றிய முறை: முந்தைய காலகட்டத்தில், நாட்டில் நடக்கும் திருமணங்களுக்கு அந்நாட்டின் அரசனுக்கும் மரியாதை நிமித்தமாக திருமண அழைப்பிதழ் அனுப்பப்படும். அப்படி, அழைப்பு வந்த எல்லா திருமணத்திற்கும் அரசனால் செல்ல முடியாது. எனவே, அரசர் நேரில் செல்ல முடியாத திருமணங்களுக்கு தனது 'ஆணைக்கோலை' அனுப்பி வைப்பார். ஆணைக்கோல் என்பது நாளடைவில் மருவி அரசாணைக்கால் என்று ஆகிவிட்டது. அரசரின் ஆணைக்கோல் வந்துவிட்டாலே அந்த திருமணம்  அரசனால் அங்கீகரிக்கப்பட்டு விட்டது  என்று அர்த்தம். அந்த திருமணம் அங்கீகரிக்கப்பட்ட திருமணம் என்பதை குறிக்கும் விதமாக தான், இந்தமுறை தான் தொன்று தொட்டு தொடர்ந்து பந்தக்கால் அல்லது முகூர்த்தகால் நடும் வழக்கம் இருந்து வருகிறது.

இதையும் படிங்க:  இந்து திருமணத்தில் தாலி கட்டும் போது மூன்று முடிச்சு போடப்படுகிறது ஏன் தெரியுமா? 

நலங்கு: எந்த ஒரு வீட்டில் பந்தக்கால் நடும் விழா முடிந்ததோ, அந்த வீட்டில் மணமகன் மற்றும் மணமகளுக்கு நலங்கு நிகழ்ச்சி நடைபெறும். திருமண நாள் வரும் வரை தினமும் காலை மற்றும் மாலை என இருவேளைகளில் மணமக்களுக்கு நலங்கு வைக்கப்படும். ஆனால், இந்த நிகழ்ச்சியானது ஒரு சில குடும்ப வழக்கப்படி மாறுபடும். மேலும் இந்நாட்களில், அசைவ உணவை சாப்பிட கூடாது.

துக்க நிகழ்ச்சிகள்: இல்லத்தில் பந்தக்கால் நட்டபிறகு இரு வீட்டாரும் திருமணம் முடியும் வரை எந்தவொரு துக்க நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளக்கூடாது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!