Republic Day Parade 2023: குடியரசு தின அணிவகுப்பை எங்கே, எப்படி பார்க்க வேண்டும்.? முழு விபரம் இதோ !!

By Raghupati RFirst Published Jan 25, 2023, 6:25 PM IST
Highlights

ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின நாளில் டெல்லியில் நடைபெறும் அணிவகுப்பில் தமிழ்நாடு உட்பட 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந் தேதி இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தாலும், இந்திய தேசத்திற்கு குடியரசு அங்கீகாரம் 1950ம் ஆண்டு ஜனவரி 26ந் தேதியே கிடைத்தது. இதையடுத்து நாடு முழுவதும் வரும் 26-ந் தேதி குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

இதையடுத்து, நாளை மறுநாள் (ஜனவரி 26ஆம் தேதி) நாட்டின் குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பு மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது. டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்ற உள்ளார்.

இதையும் படிங்க..Republic Day wishes 2023: தேசப்பற்றை தூண்டும் குடியரசு தின வாழ்த்துகள்! நண்பர்களுக்கு அனுப்பி மகிழுங்கள்..

பிரம்மாண்டமாக நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் முப்படைகளில் கம்பீரமான அணிவகுப்பும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் பல்வேறு மாநிலங்களின் ஊர்திகளும் நடைபெறும். இதை கண்டுகளிப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள். இதையொட்டி தலைநகர் டெல்லியில் கடமை பாதையில் பிரம்மாண்ட அணிவகுப்பு நடத்தப்பட உள்ளது.

இந்த அணிவகுப்பில் நாட்டின் கலாச்சாரம், பொருளாதார முன்னேற்றம், ராணுவ வலிமையைப் பறைசாற்றும் வகையில் 23 அலங்கார ஊர்திகள் பங்கேற்க உள்ளன. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சார்பில் 17 ஊர்திகளும் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் சார்பில் 6 ஊர்திகளும்அணிவகுப்பில் இடம்பெறுகின்றன.

இதையும் படிங்க..Bank Holiday: வங்கிக்கு 5 நாட்கள் விடுமுறை!.. வாடிக்கையாளர்களே உஷார்!! எப்போது தெரியுமா.?

தமிழ்நாடு, அசாம், அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா, மேற்கு வங்கம், ஜம்மு - காஷ்மீர், லடாக், தாத்ரா நகர் ஹவேலி, டாமன் - டையூ, குஜராத், ஹரியாணா, உத்தர பிரதேசம், உத்தராகண்ட், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் 17 ஊர்திகள் அணிவகுப்பை அலங்கரிக்கும்.

நீங்கள் உலகில் எங்கிருந்தும் குடியரசு தின அணிவகுப்பைப் பார்க்கலாம். குடியரசு தின அணிவகுப்பு லைவ் ஸ்ட்ரீமிங் republicday.nic.in என்ற தளம் மூலமாக நேரலையில் கண்டு மகிழலாம். அதுமட்டுமில்லாமல், குடியரசு தின அணிவகுப்பின் நேரடி ஒளிபரப்பு இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, தமிழ்,மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் காணலாம்.

இதையும் படிங்க..ஜனவரி 27 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

click me!