குடியரசு தினவிழா ரத்து..! சீனாவில் உள்ள இந்திய தூதரகம் அவசர அறிவிப்பு..! கரோனோ வைரஸ் எதிரொலி..!

By ezhil mozhiFirst Published Jan 25, 2020, 1:00 PM IST
Highlights

உலக நாடுகள் அனைவர் மத்தியிலும் ஒரு விதமான பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது சீனாவில் தென்படும் கரோனோ வைரஸால் மனிதர்களுக்கு ஏற்படும் பெரும் பாதிப்பு மற்றும் இறப்பு விகிதம்.

குடியரசு தினவிழா ரத்து..! சீனாவில் உள்ள இந்திய தூதரகம் அவசர அறிவிப்பு..! கரோனோ வைரஸ் எதிரொலி..!

சீன தலைநகர் பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தில் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படும் இந்திய குடியரசு தினவிழா கொண்டாடுவதை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. 

உலக நாடுகள் அனைவர் மத்தியிலும் ஒரு விதமான பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது சீனாவில் தென்படும் கரோனோ வைரஸால் மனிதர்களுக்கு ஏற்படும் பெரும் பாதிப்பு மற்றும் இறப்பு விகிதம்.

இதன் காரணமாக அனைத்து நாடுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்தியாவிலும் சீனாவில் இருந்து மும்பை வந்த ஆறு பேருக்கு வைரஸ் இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். அதில் நான்கு பேருக்கு இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற இருவரும் கஸ்தூர்பா மருத்துவமனையில் தனிமையில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரப்படுகிறது. 

சீனாவிலிருந்து மட்டுமல்லாமல் வேறு எந்த நாட்டில் இருந்து வந்தாலும் 28 நாட்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்ற தகவலை மராட்டிய மாநில சுகாதாரத்துறை கண்காணிப்பு அதிகாரி பிரதீப் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சீனா முழுக்க தொடர்ந்து பெரும் பரபரப்பாக பேசப்படும் கரோனோ வைரஸ் குறித்த பீதியால், தற்போது உலகம் முழுவதுமே ஒரு விதமான பரபரப்பு காணப்படுகிறது. 

இந்த நிலையில் சீன தலைநகர் பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தில் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படும் இந்திய குடியரசு தினவிழா கொண்டாடுவதை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள இந்திய தூதரகம், "சீனா முழுவதும் கரோனா வைரஸ் பரவல் அதிகமாக காணப்படுவதால், அது குறித்த பீதி மக்கள் மத்தியில் பரவலாக இருப்பதால்  குடியரசு தின விழாவை கொண்டாட ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. குடியரசு தின விழாவையொட்டி நேற்று முன்தினம் இந்திய தூதரகம் நடத்திய சிறப்பு விருந்தில் சீன அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர் என்பது கூடுதல் தகவல்

click me!