சீனாவில் இருந்து மும்பை வந்த இருவருக்கு "கரோனோ வைரஸ்"..? கஸ்தூர்பா மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பு...!

By ezhil mozhiFirst Published Jan 25, 2020, 12:49 PM IST
Highlights

சீனாவிலிருந்து மட்டுமல்லாமல் வேறு எந்த நாட்டில் இருந்து வந்தாலும் 28 நாட்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்ற தகவலை மராட்டிய மாநில சுகாதாரத்துறை கண்காணிப்பு அதிகாரி பிரதீப் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் இருந்து மும்பை வந்த இருவருக்கு "கரோனோ வைரஸ்"..? கஸ்தூர்பா மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பு...! 

உலக நாடுகள் அனைவர் மத்தியிலும் ஒரு விதமான பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது சீனாவில் தென்படும் கரோனோ வைரஸால் மனிதர்களுக்கு ஏற்படும் பெரும் பாதிப்பு மற்றும் இறப்பு விகிதம்.

இதன் காரணமாக அனைத்து நாடுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்தியாவிலும் சீனாவில் இருந்து மும்பை வந்த ஆறு பேருக்கு வைரஸ் இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். அதில் நான்கு பேருக்கு இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற இருவரும் கஸ்தூர்பா மருத்துவமனையில் தனிமையில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரப்படுகிறது. 

சீனாவிலிருந்து மட்டுமல்லாமல் வேறு எந்த நாட்டில் இருந்து வந்தாலும் 28 நாட்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்ற தகவலை மராட்டிய மாநில சுகாதாரத்துறை கண்காணிப்பு அதிகாரி பிரதீப் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சீனா முழுக்க தொடர்ந்து பெரும் பரபரப்பாக பேசப்படும் கரோனோ வைரஸ் குறித்த பீதியால், தற்போது உலகம் முழுவதுமே ஒரு விதமான பரபரப்பு காணப்படுகிறது. 

இதுதவிர சீன தலைநகர் பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தில் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படும் இந்திய குடியரசு தினவிழா கொண்டாடுவதை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் இந்திய தூதரகம் சீனா முழுவதும் கரோனா வைரஸ் பரவல் அதிகமாக காணப்படுவதால் அது குறித்த வதந்தி மக்கள் மத்தியில் பரவலாக இருப்பதாலும் குடியரசு தின விழாவை கொண்டாட ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது குடியரசு தின விழாவையொட்டி நேற்று முன்தினம் இந்திய தூதரகம் நடத்திய சிறப்பு விருந்தில் சீன அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர் என்பது கூடுதல் தகவல் இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க வழிவகை

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க ஒரு வைரஸ் மிக அதிகமாக பரவுவதை அடுத்த சீனாவில் தங்கி இருக்கும் மாணவர்கள் தங்கி வேலை செய்பவர்கள் என அனைவரும் அவரவர் நாட்டிற்கு திரும்ப மும்முரம் காட்டி வருகின்றனர் அந்த வகையில் இந்தியாவில் பலரும் விரும்புகின்றனர் குறிப்பாக தற்போது கேரளாவில் 80 பேர் சீனாவில் இருந்து வருகை புரிந்த இருக்கின்றார்கள் அவர்களை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது இவர்கள் அனைவரும் சுகாதார துறையில் தீவிர கண்காணிப்பில் உள்ளனர் இவர்களில் தற்போது 7 பேருக்கு லேசான காய்ச்சல் தென்படுவதால் சந்தேகத்தின் பேரில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது ஒருவேளை காரணம் வைரஸ் அதற்கான சிகிச்சையை மேற்கொள்ளவும் தனிமைப்படுத்தப்பட்டு வேறு எங்கும் யாருக்கும் பரவாது தடுக்க பல்வேறு முயற்சிகளும் திட்டங்களும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

click me!