ஜியோ தாறுமாறு சலுகை..! வெறும் ரூ.199 இல் 1000 ஜிபி டேட்டா..! ஊரடங்கிலும் கில்லியாய் செயல்படும் ரிலையன்ஸ்!

thenmozhi g   | Asianet News
Published : Apr 14, 2020, 05:13 PM IST
ஜியோ தாறுமாறு சலுகை..! வெறும் ரூ.199 இல் 1000 ஜிபி டேட்டா..! ஊரடங்கிலும் கில்லியாய் செயல்படும் ரிலையன்ஸ்!

சுருக்கம்

ரிலையன்ஸ் ஜியோவை பொறுத்தவரையில் ஆரம்ப கால கட்டத்தில் இருந்தே அனைத்து தர மக்களும்  பயன்பெறும் வகையில் டேட்டா சலுகை கொடுத்து வருகிறது

ஜியோ தாறுமாறு சலுகை..! வெறும் ரூ.199 இல் 1000 ஜிபி டேட்டா..! ஊரடங்கிலும் கில்லியாய் செயல்படும் ரிலையன்ஸ்! 

மக்கள் மனதில் தனி இடம் பிடித்துள்ள ஜியோ மற்ற தொலைதொபார்பு நிறுவனங்களை காட்டிலும்  சலுகையை தாறுமாறாக அறிவித்து தனக்கென மக்கள் மனதில் தனி இடம் பிடித்து உள்ளது. தற்போது ஊரடங்கு காலத்திலும் மக்கள் எந்த வித இன்னலும் அடையாமல் வீட்டில் இருந்தபடியே வேலை செய்வதற்கு ஏதுவாக டேட்டா சலுகையில் செம்ம மாஸ் காண்பித்து வருகிறது  


அதன் ஒருபகுதியாக ஏற்கனவே ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு Rs 11, Rs 21, Rs 51, Rs 101 திட்டங்களுக்கு வழக்கமாக கொடுத்துக் கொண்டிருந்த டேட்டாவை விட 2 மடங்கு அதிகமாக டேட்டா கொடுக்கிறார்கள். அதோடு ஜியோ அல்லாத வாடிக்கையாளர்களுடன் பேச கூடுதல் நிமிடங்களைக் கொடுத்து இருக்கிறார்கள்.

இந்த ஒரு நிலையில் ஊரடங்கு உத்தரவு மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து உள்ளதால், டேட்டாவின் தேவையும் சரமாரியாக அதிகரித்து இருக்கிறது. மேலும் வீட்டில் இருக்கும் அனைவரும் அலுவலக பணிகளை முடித்து விட்டு நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம் என அனைத்திலும் அவர்களுக்கு விருப்பமான படமோ அல்லது நிகழ்ச்சியலையோ பார்த்து வருகின்றனர். இந்த ஒரு நிலையில் Reliance JioFiber ஒரு சூப்பர் திட்டத்தில் அறிமுகம் செய்து உள்ளது. 

திட்டத்தின் விவரம் 

199 ரூபாயில் 1 டிபி (1000 ஜிபி) டேட்டா, ஜிஎஸ்டி உடன் 234 ரூபாய்ஆகிறது. 
டேட்டாவின் வேகம் 100 எம் பி பி எஸ் (Mbps) 
கால அவகாசம்: 7 நாட்கள் மட்டும் தான்.( அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் உண்டு )
7 நாட்கள் முடிந்த உடன்  இந்த திட்டத்தை add-on திட்டமாகவோ மாற்றிக்கொள்ளலாம். அல்லாது தனி  திட்டமாகவும் பயன்படுத்த முடியும். 7 நாட்களுக்குப் பின் கூட அன்லிமிடெட் இணைய சேவையை பயன்படுத்திக் கொள்ளலாமாம். ஆனால் இணையத்தின் வேகம் 1 எம் பியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது


ரிலையன்ஸ் ஜியோவை பொறுத்தவரையில் ஆரம்ப கால கட்டத்தில் இருந்தே அனைத்து தர மக்களும் பயன்பெறும் வகையில் டேட்டா சலுகை கொடுத்து வருகிறது. அதே போன்று தற்போது கொரோனாவால் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலையில் மக்களுக்கு டேட்டா சலுகை வழங்கின் வருகிறது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்