WH0 முக்கிய அறிவிப்பு ! மனிதர்களிடம் டெஸ்ட் செய்ய 3 மருந்துகள் ரெடி..! கொரோனாவில் இருந்து தப்பிக்க வாய்ப்பு?

By ezhil mozhiFirst Published Apr 14, 2020, 3:38 PM IST
Highlights
ஒரு பக்கம் ஆராய்ச்சி...இன்னொரு கொரோனா அதிகரிப்பு என தொடர்கதையாக உள்ளது கொரோனாவின் பாதிப்பும்..அதற்கு எதிராக மக்கள் போராடுவதும். இந்த ஒரு நிலையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 70 மருந்துகளில் 3 மருந்துகள் மனிதர்களுக்கு கொடுத்து சோதிக்கும் நிலைமைக்கு முன்னேறி உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
WH0 முக்கிய அறிவிப்பு !  மனிதர்களிடம் டெஸ்ட் செய்ய 3 மருந்துகள் ரெடி..! கொரோனாவில் இருந்து தப்பிக்க வாய்ப்பு? 

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுப்பிடிக்கும் பணியில் மிகவும் மும்முரமாக ஆராய்ச்சியாளர்கள் இறங்கி உள்ளனர். அந்த வகையில் தற்போது வரை கொரோனாவுக்கு 70 மருந்துகள் வரை கண்டுபிடிக்கப்பட்டு, ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஒரு பக்கம் ஆராய்ச்சி...இன்னொரு கொரோனா அதிகரிப்பு என தொடர்கதையாக உள்ளது கொரோனாவின் பாதிப்பும்.. அதற்கு எதிராக மக்கள் போராடுவதும். இந்த ஒரு நிலையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 70 மருந்துகளில் 3 மருந்துகள் மனிதர்களுக்கு கொடுத்து சோதிக்கும் நிலைமைக்கு முன்னேறி உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மனதிற்கு ஆறுதல் விஷயமாக மாறி உள்ளது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனாவால் இதுவரை 17 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு அதில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 


இப்படி ஒரு நிலையில் இதுவரை 209 நாடுகளுக்கும் மேலாக பரவி உள்ள கொரோனவை தடுக்க தடுப்பூசி  கண்டுபிடித்தால் மட்டுமே தீர்வு  கிடைக்கும் என்ற பேச்சும் அடிபடுகிறது. காரணம்...ஒரு பக்கம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பின் குணமானாலும் அவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்படுவதும், அவர்கள் மூலமாக மீண்டும் மற்றவர்களுக்கு பரவுவதுமாக உள்ளது. இந்த நிலையில் இரவும் பகலும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு தற்போது 70 விதமான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு பரிசோதனை நடைபெற்றுவருவதாகக் கூறியுள்ளது WHO


அதில் மூன்று மருந்துகள் மட்டுமே மனிதர்களுக்கே கொடுத்து சோதிக்கும் கட்டத்துக்கு முன்னேறியுள்ளதாக தெரிவித்து உள்ளது சற்று ஆறுதல் தரும் செய்தியாக உள்ளது. அதன் படி ஹாங்காங் நிறுவனமான CanSino நிறுவனமும், பீஜிங் உயிர்தொழில் நுட்பவியல் நிறுவனமும் இணைந்து தயாரித்த மருந்து மனிதர்களிடம் சோதனை நடத்தும் அளவுக்கும் முதற்கட்ட சோதனையில் வெற்றி பெற்று உள்ளது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது. 


இது தவிர அமெரிக்காவைச் சேர்ந்த இரு நிறுவனங்களின் மருந்துகளும் இந்த கட்டத்தை எட்டியுள்ளது. இருந்த போதிலும்,கொரோனா வைரஸின் வடிவம் மற்றும் பரிணாமம் மாறி மாறி உருவெடுப்பதால், அதற்கு சரியான மருந்தை கண்டுப்பிடிப்பதில் குழம்பி உள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். எனவே கொரோனாவிற்கு சரியான மருந்து கண்டுபிடிக்கும் காலம் நிர்ணயிக்க முடியாத சூழல் தற்போது நிலவுகிறது என்பதையும், அதே வேளையில் தனிமைப்படுத்திக்கொள்ளுதல் தான் தற்போதைக்கு சிறந்த வழி என்பதும் குறிப்பிடத்தக்கது.
click me!