செவ்வாழை பழத்திலும் இப்படி ஒரு மோசடியா? மக்களே உஷார்! அதிரவைக்கும் வீடியோ!

By manimegalai aFirst Published Feb 24, 2019, 1:41 PM IST
Highlights

மஞ்சள் நிற வாழைப்பழங்களை விட செவ்வாழை பழத்திற்கு மவுசு அதிகம். பூவம், கற்பூரவள்ளி, பச்சை, வாழைப்பழங்கள் 5 ரூபாய்க்கு கிடைத்தாலும், ஒரு செவ்வாழை பழத்தின் விலை 10 முதல் 15 ரூபாய்க்கு மிகாமல் விற்கப்படுகிறது. அதற்கு ஏற்ற போல் இந்த பழத்தில் பல்வேறு நலன்கள் உள்ளது. 
 

"மஞ்சள் நிற வாழைப்பழங்களை விட செவ்வாழை பழத்திற்கு மவுசு அதிகம். பூவம், கற்பூரவள்ளி, பச்சை, வாழைப்பழங்கள் 5 ரூபாய்க்கு கிடைத்தாலும், ஒரு செவ்வாழை பழத்தின் விலை 10 முதல் 15 ரூபாய்க்கு மிகாமல் விற்கப்படுகிறது. அதற்கு ஏற்ற போல் இந்த பழத்தில் பல்வேறு நலன்கள் உள்ளது. 

செவ்வாழையில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது சிறுநீரக கற்கள் உருவாவது, இதய நோய் மற்றும் புற்றுநோய் தாக்குதலைத் தடுக்கும். மேலும் இது உடலில் கால்சியம் உறிஞ்சுவதை அதிகரித்து, எலும்புகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். எனவே உங்களுக்கு சிறுநீரக பிரச்சனைகள் ஏதும் வராமலிருக்க தினமும் ஒரு செவ்வாழை உள்கொள்ள வேண்டும் என கூறுகிறார்கள் மருத்துவர்கள்.

அதே போல் பொதுவாக எடையைக் குறைக்க நினைப்போர் கலோரிகள் அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களை எடுக்கக்கூடாது. செவ்வாழையில் மற்ற வாழைப்பழங்களை விட கலோரிகள் மிகவும் குறைவு. எனவே எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் ஒரு செவ்வாழையை காலையில் உட்கொண்டு வந்தால், பசி நீண்ட நேரம் எடுக்காமல் இருக்கும்.

இப்படி பல நன்மைகளை அல்லி தரும் செவ்வாழை பழத்திலும் ஒரு சில மோசடிகள் நடக்கிறது என்பதை எடுத்துக்காட்டும் விதமாக ஒரு வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது...

click me!