
டில்லியில் ஹெல்மட் அணியாமல் கிரீடம் அணிந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற ராவணன் வேட நடிகருக்கு போலீசார் அபராதம் விதித்ததையடுத்து நேரில் சென்று அபராதத்தை செலுத்தினார்.
புதுடில்லியில் உள்ள செங்கோட்டையில் ஆண்டுதோறும் நவராத்திரியையொட்டி ராம்லீலா நிகழ்ச்சி நடத்தப்படும்.
இதில், நடிகர்கள் வேடம் அணிந்து விழாவை சிறப்பித்து வருவார்கள். அதன்படி, ராவணன் வேடத்தில் நடித்த முகேஷ் ரிஷி, ராவணன் தோற்றத்தில் கிரீடம் அணிந்தபடி டில்லி சாலைகளில் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்துள்ளார்.
இதற்கான புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலானது. இதையடுத்து போக்குவரத்து போலீசார் முகேஷ் ரிஷிக்கு நோட்டீஸ் அனுப்பினர்.
இதைதொடர்ந்து போக்குவரத்து போலீஸ் அலுவலகத்திற்கு நேரில் சென்று முகேஷ் ரிஷி, அபராதத்தை செலுத்தியதாக தெரிகிறது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.