
புனேவில் ஒரு பெண் தனது கணவர் காய்கறி வாங்குவதற்காக எழுதி கொடுத்துள்ள லிஸ்ட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
புனேவில் ஐடி தொழில் செய்து வருபவர் இரா கோல்வாக்கர். இவர் தனது கணவரிடம் காய்கறி வாங்கி வருமாறு கூறியுள்ளார். அதற்கு தான் இதுவரை காய்கறி வாங்கியது இல்லை எனவும், அதனால் நான் போகமாட்டேன் எனவும் ஒவ்வொரு முறையும் எஸ்கேப்பாகியுள்ளார்.
இதையே வாடிக்கையாக வைத்து கொண்டு வந்த கணவனுக்கு ஒரு ஷாக் காத்து கொண்டு இருந்தது. அதுதான் அவரது மனைவி எழுதி வைத்திருந்த காய்கறி லிஸ்ட்.
அதில் ஒவ்வொரு காய்கறியும் எந்த நிறத்தில், எப்படி இருக்க வேண்டும் என குறிப்பிட்டதுடன், காய்கறியை எளிதில் கண்டுபிடிப்பதற்காக அதன் படத்தையும் வரைந்து கொடுத்து அனுப்பி உள்ளார்.
தக்காளி பாதி மஞ்சளாகவும், பாதி சிவப்பாகவும் இருக்க வேண்டும் எனவும், வெங்காயம் சிறியதாகவும், வட்டவடிவமாக இருக்க வேண்டும் எனவும், பச்சை மிளகாய்களை இலவசமாக கேட்டு வாங்கி வரவும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த காய்கறி லிஸ்டை தனது டுவீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அந்த பெண் தனது கணவருக்கு கொடுத்தது நீங்களும் உங்கள் வீட்டில் முயற்சித்து பாருங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.