தமிழகத்தில் மழை கொட்டோ கொட்டுன்னு கொட்ட போகுதாம்..! ரெடியா இருங்க மக்களே..!

By ezhil mozhiFirst Published Jun 3, 2019, 5:29 PM IST
Highlights

அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

தமிழகத்தில் மழை கொட்டோ கொட்டுன்னு கொட்ட போகுதாம்..! ரெடியா இருங்க மக்களே..! 

அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பொதுவாகவே ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை மூலமாக சுமார் 70 சதவீத மழைப்பொழிவை இந்தியா பெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கேரளாவில் வரும் 6ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அனைத்து சூழ்நிலையும் உள்ளது என தெரிவித்து இருந்தது. தென்மேற்கு பருவ மழை தொடங்கினால் முல்லை பெரியாறு மற்றும் குமரி மாவட்டத்தின் பல்வேறு நீர் ஆதாரங்கள் பயன்பெறும்.

இந்நிலையில் அரபிக் கடலின் தென் பகுதியில் தென்மேற்கு பருவ மழைக்கான சூழ்நிலை தொடங்கி உள்ளது என்றும் இதற்கு முன்னதாக அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அனைத்து சூழலும் உருவாகியுள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனை வைத்து பார்க்கும் போது வரும் 5ஆம் தேதிக்கு பின் கேரளா தமிழகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நன்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டுள்ளது.இதற்கிடையே தமிழக மற்றும் தென் தமிழகத்தில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், திருச்சி மதுரை திண்டுக்கல் நாமக்கல் பூசாரி தனது 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர நாமக்கல் கரூர் திருச்சி மதுரை திண்டுக்கல் பெரம்பலூர் சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் குறைந்தபட்சம் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிக வெப்பம் கூடுதல் வெப்பம் நிலவும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தை பொருத்தவரையில் வேலூர் குடியாத்தம் கிருஷ்ணகிரி சேலம் உள்ளிட்ட இடங்களில் 3 சென்டி மீட்டர் மழையும் தர்மபுரி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டியில் 7 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.சுட்டெரிக்கும் கோடை வெயிலுக்கு நடுவே மழை வரும் என்ற செய்தி மக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது ஆனால் மழை எதிர்பார்த்த அளவுக்கு இருக்குமா என்பதில் உள்ளது உண்மையான மகிழ்ச்சி.

click me!