மெட்ரோ, மாநகர பேருந்தில் பெண்கள் இனி இலவசமாக பயணிக்கலாம்..! அரசு அதிரடி..!

By ezhil mozhiFirst Published Jun 3, 2019, 1:18 PM IST
Highlights

டெல்லியில் பெண் பயணிகள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
 

மெட்ரோ, மாநகர பேருந்தில் பெண்கள் இனி இலவசமாக  பயணிக்கலாம்..! அரசு அதிரடி..!

டெல்லியில் பெண் பயணிகள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

மெட்ரோ ரயில் மட்டுமின்றி, மாநகர பேருந்துகளிலும் இலவசமாக பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. பெண்களுக்கு இலவச சேவை   வழங்கும் செலவை டெல்லி அரசே ஏற்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

equity பங்குகளில், 50 சதவீதத்தை டெல்லி அரசு வைத்து உள்ளது. இந்த  பங்கு தொகையில் இருந்து,பெண்களுக்கு வழங்கும் இலவச சேவைக்கான தொகையை பகிர்ந்துகொள்ள உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்து உள்ளது. மேலும் ஒரு நாளைக்கு 8.4 லட்சம் பெண்கள் டெல்லியில் தினந்தோறும் பயணத்தை மேற்கொள்வதாக புள்ளி விவரம் தெரிவிக்கின்றது. இந்த நிலையில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.

அதே வேளையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், டெல்லியில் உள்ள 7 நாடாளுமன்ற தொகுதியிலும் பாஜகவே வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. படு தோல்வியை சந்தித்த ஆம் ஆத்மீ கட்சி, மக்கள் மத்தியில் மாற்றத்தை கொண்டுவர தற்போது இந்த முடிவை எடுத்து உள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.

click me!