அடுத்த மழை சென்னையில் தான்..! அடித்து கூறும் சென்னை வானிலை ஆய்வு மையம்..!

By ezhil mozhiFirst Published Jun 1, 2019, 5:40 PM IST
Highlights

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்றளவும் அனல் காற்று வீசினாலும் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

அடுத்த மழை சென்னையில் தான்..! அடித்து கூறும் சென்னை வானிலை ஆய்வு மையம்..! 

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்றளவும் அனல் காற்று வீசினாலும் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான நேரம் வந்துவிட்டாலும் இன்றளவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.

இருந்த போதிலும் ஒரு சில இடங்களில் மட்டும் அவ்வப்போது மழை பெய்தும் சூறைக்காற்றுடன் கூடிய மிதமான மழையும் பெய்து வருகிறது என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இதற்கிடையில் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் திருவண்ணாமலை வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் உடன் இடியுடன் கூடிய மழையும் எதிர்பார்க்கலாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தவிர தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் இந்த மழைக்கு காரணம் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பொறுத்தவரையில் திருச்சியில் 4 சென்டி மீட்டர் மழையும் உசிலம்பட்டியில் 3 சென்டி மீட்டர் மழையும் கொடைக்கானல் மதுரை அறந்தாங்கி உள்ளிட்ட இடங்களில் இரண்டு சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திருத்தணியில் ஒரு மணி நேரமாக பயங்கர சூறை காற்றுடன் மழை பெய்து வருவதால், ஆங்காங்கு மரம் முறிந்து விழுந்தும், போக்குவரத்து சேவையும் பாதித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!