ஒரே போடாய் போட்டு தள்ளிய வடிவேலு..! என்ன நேசமணி? எனக்கு தெரிஞ்சதெல்லாம் மோடி தான்..!

Published : Jun 01, 2019, 03:44 PM ISTUpdated : Jun 01, 2019, 03:45 PM IST
ஒரே போடாய் போட்டு தள்ளிய வடிவேலு..! என்ன நேசமணி? எனக்கு தெரிஞ்சதெல்லாம் மோடி தான்..!

சுருக்கம்

கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் #prayfornesamani என்ற ஒரு வசனம் தொடர்ந்து ட்ரெண்டாகி முதலிடத்தை பிடித்தது. 

ஒரே போடாய் போட்டு தள்ளிய வடிவேலு..! என்ன நேசமணி? எனக்கு தெரிஞ்சதெல்லாம் மோடி தான்..! 

கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் #prayfornesamani என்ற ஒரு வசனம் தொடர்ந்து ட்ரெண்டாகி முதலிடத்தை பிடித்தது. குறிப்பாக நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று நேற்று முன் தினம், மத்தியில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது பாஜக.உடன் 57 அமைச்சர்கள் பதவியேற்றனர்.

நாடே பெருத்த எதிர்பார்ப்பில் பேசிக்கொண்டிருந்த ஒரு விஷயமாக பார்க்கப்பட்ட பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியை விட சமூக வலைத்தளத்தில் முதலிடத்தில் ட்ரெண்டிங் ஆக்கப்பட்டு இருந்த ஒரு விஷயம் #prayfornesamani 

நேசமணி என்ற கேரக்டர் 2001 ஆம் ஆண்டு வெளியான பிரண்ட்ஸ் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த ஒரு காட்சியில் நேசமணி கதாபாத்திரமாக நடிகர் வடிவேலு நடித்திருப்பார். இவரை மையமாக வைத்தே அதிக அளவில் மீம்ஸ் ட்ரெண்டிங் ஆகி வருவது வழக்கம். அதில் நேசமணி உலக அளவில் ட்ரெண்டிங் ஆனது.

 

இது குறித்து கருத்து தெரிவித்த நடிகர் வடிவேலு,தொடக்கத்தில் "நான் சமூக வலைதளங்களில் இல்லை...ஃபேஸ்புக் ட்விட்டர் இதெல்லாம் எனக்கு என்னவென்றே தெரியாது.நீங்களா ஏதோ சொல்றீங்க நீங்களா ஏதோ கேள்வி கேட்குறீங்க? என்ற பாணியில் சொல்லி இருந்தார். பிறகு இது குறித்து முழுமையாக அறிந்த பின், 18 வருடங்களுக்கு பிறகு நேசமணி என்ற கேரக்டர் மக்களிடையே எந்த அளவிற்கு பிரபலம் அடைந்து இருப்பதற்கு பெரும் மகிழ்ச்சி என தெரிவித்திருந்தார்.

மேலும், நான் எந்த படத்தில் நடித்தாலும் எனக்கு வரக்கூடிய சில காமெடிகளை டைரக்டரிடம் சொல்வது உண்டு. அதற்கு மறுப்பே தெரிவிக்காமல் டைரக்டர்கள் ஏற்றுக்கொள்வார்கள். அப்போதுதான் என்னுடைய சிறப்பான சிந்தனையையும், நடிப்பையும் வெளிப்படுத்த முடிந்தது.

ஆனால் தற்போது தயாரிப்பாளர் சங்கம் என்னை வாழ விடாமல் செய்கின்றனர். அதைப் பற்றியெல்லாம் எனக்கு இப்போது கவலை இல்லை. தற்போது கிடைத்துள்ள இடைவெளியில் என் மகன் மகளுக்கு திருமணம் செய்து வைத்து அவர்களை செட்டில் செய்து விட்டேன். இம்சை அரசன் இரண்டாவது பாகத்தில் மூன்று கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். என்னுடைய பங்களிப்பு இல்லாமல் அந்த படம் முழுமை அடையாது.. எனவே மொத்த விஷயமும் என்னை சார்ந்ததாக இருக்கின்றது. மற்ற படங்களில் நான் நடிப்பதை போல் சுதந்திரமாக என்னை நடிக்க விடுவதில்லை. நான் சொன்னதை நீ செய்தால் போதும் என கட்டுப்பாடோடு நடிக்க செய்கின்றனர்.என் இஷ்டத்துக்கு என்னை நடிக்க விட்டால் தான் நேசமணி போன்ற ஒரு கேரக்டர் இந்த உலகத்திற்கு தெரிய வரும். இதை இயக்குனர் புரிந்து கொண்டால் நன்றாக இருக்கும்" என தெரிவித்துள்ளார் நடிகர் வடிவேலு.

இதில் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், நாடேநேசமணி என ட்ரெண்டிங் செய்துவந்த நேற்று முன்தினம் 30ஆம் தேதியன்று பிரதமர் பதவி ஏற்பு விழாவை முந்திக்கொண்டு நம்பர் ஒன் பொசிஷனில் நேசமணி ட்ரெண்ட் இருந்தது. அதாவது  நாடே #prayfornesamani என நடிகர் வடிவேலுவை வைத்து ட்ரெண்ட் செய்தாலும், மீம்ஸ் நாயகன் வடிவேலு என்ன சொல்கிறார் என்றால், அன்றைய தினத்தில் எனக்கு தெரிந்ததெல்லாம் மோடி பதவியேற்பு விழா மட்டுமே.. நேசமணி ட்ரெண்டிங் எல்லாம் எனக்கு அநாதரைய தினத்தில் தெரியவே தெரியாது என நெத்தியடி பதில் கொடுத்து உள்ளார். இதனால் நெட்டிசன்கள் கொஞ்சம் அப்செட் ஆகி உள்ளனராம். 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

வீட்டில் துளசி செடி வைத்தால் கிடைக்கும் நன்மைகள்
குழந்தையின் ஞாபகசக்தியை அதிகரிக்கும் '7' அற்புத உணவுகள்