ஸ்ட்ராங்கா சொல்லும் செங்கோட்டையன்..! தமிழகத்தில் இருமொழி கொள்கை தான்..!

By ezhil mozhiFirst Published Jun 1, 2019, 1:01 PM IST
Highlights

தமிழகத்தில் இருமொழிக்கொள்கை தொடரும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.
 

ஸ்ட்ராங்கா சொல்லும் செங்கோட்டையன்..! தமிழகத்தில் இருமொழி கொள்கை தான்..! 

தமிழகத்தில் இருமொழிக்கொள்கை தொடரும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களுக்கு தெரிவித்த செங்கோட்டையன், 

இரு மொழிக் கொள்கைதான் தொடர முடியும் என மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதி உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார் அமைச்சர் செங்கோட்டையன்.

மூன்றாவது மொழியை மத்திய அரசு வலியுறுத்தினாலும், மாநில அரசின் நிலை குறித்து கடிதம் எழுதி இருக்கிறோம் என்றும், 11 ஆண்டுகளுக்கு பிறகு புதிய பாட திட்டம்  நாளை மறுநாள் வெளியிடப்படுகிறது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பல்வேறு தரப்பினர் தங்களது கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

அதன்படி, கனிமொழி தெரிவிக்கும்போது,

தமிழகத்தில் மூன்றாவது மொழி திணிக்கும் போது, கண்டிப்பாக அதற்கு பயங்கர எதிர்ப்பு இருக்கும் என தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் தெரிவிக்கும் போது, மொழியை கற்றுக் கொள்வது அவரவர் விருப்பம் தமிழக மக்கள் மூன்றாவது மொழியை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

வைகோ தெரிவிக்கும் போது,

தமிழகத்தில் மீண்டும் மொழிப்போர் வெடிக்கும் என்றார். கவிஞர் வைரமுத்து தெரிவிக்கும் போது, " தமிழகத்தில் இந்தி திணிப்பு உள்ளது" என்றார்.
 

click me!