
தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. இது குறித்து வெதர்மேன் தெரிவிக்கும்போது,
"இன்று சென்னையில் 27 டிகிரி வெப்பநிலை பதிவாகும் என்றும் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்து இருக்கிறார்.
தற்போது தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும், கேரளாவிலும் நல்ல மழை பெய்து வருகிறது.குடகில் மட்டும் 10 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. வயநாடு பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
இந்த நிலையில் சென்னையில் மடிப்பாக்கம் பல்லாவரம் கிண்டி தாம்பரம் உள்ளிட்ட பல இடங்களில் மிதமான மழை பெய்து உள்ளது. இதுதவிர சென்னையின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசான மழை பெய்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர். நீண்ட மாதங்களுக்கு பிறகு சென்னையில் இது போன்ற ஒரு காலநிலையை மக்கள் உணர்கின்றனர்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.