
2 தினங்களுக்கு தமிழகத்தில் பயங்கர மழை..! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்து உள்ளார்.
மேலும் நீலகிரி தேனி கோவை திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், இதுதவிர வேலூர் திருவள்ளூர் திருவண்ணாமலை காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், மன்னார் வளைகுடா பகுதி மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் அடுத்து வரும் இரு தினங்களுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.
இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..!
தென் தமிழக கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், தென்மேற்கு பருவக்காற்று காரணமாக அடுத்து வரும் ஒரு வாரத்திற்கு கேரளாவில் அதிதீவிர கனமழை பெய்யக்கூடும் எனவும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இது தவிர மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளதால், கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும், எனவே மீனவர்கள் தென் மேற்கு மற்றும் மத்திய அரபிக் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.