
சுட்டெரிக்கும் வெயிலுக்கு நடுவே நெல்லை மாவட்டம் தென்காசி செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது
கர்நாடகா முதல் குமரிகடல் பகுதி பகுதியின் மேற்பரப்பில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டு உள்ளதால் அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் லேசான ஆங்காங்கே லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
சென்னையை பொறுத்த வரையில் கடந்த இரண்டு நாட்களாக ஒரு சில நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் ஒரு சில நேரங்களில் வெப்பம் சற்று அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் நெல்லை மாவட்டம் தென்காசி செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருவதால் அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடுமையான வெயில் நிலவி வந்த இந்த தருணத்தில் திடீரென பெய்த மழையால் அப்பகுதி முழுவதும் குளிர்ச்சி அடைந்து உள்ளது
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.