சொன்னா நம்ப மாட்டீங்க..! ஆலியா பட் தினமும் இப்படி செய்யுறதால தான் இவ்வளவு அழகா இருக்காங்களாம்...!

Published : Apr 11, 2019, 06:29 PM IST
சொன்னா நம்ப மாட்டீங்க..!  ஆலியா பட் தினமும் இப்படி செய்யுறதால தான் இவ்வளவு அழகா இருக்காங்களாம்...!

சுருக்கம்

பாலிவுட்டின் கனவு நாயகியாக வலம் வரும் அலியா பட்டின் அழகின் ரகசியம் யாருக்காவது தெரியுமா ? அவருடைய அழகின் ரகசியத்திற்கு ஆறு முக்கிய காரணங்கள் உள்ளது.

பாலிவுட்டின் கனவு நாயகியாக வலம் வரும் அலியா பட்டின் அழகின் ரகசியம் யாருக்காவது தெரியுமா ? அவருடைய அழகின் ரகசியத்திற்கு  முக்கிய காரணங்கள் உள்ளது.

1. எதை மிஸ் பண்ணினாலும் தினமும் சரியான நேரத்தில் தூங்குவது. ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 7 முதல் 8 மணி நேர உறக்கம் கொள்வது மிகச்சிறந்த ஒன்று. அப்பொழுதுதான் இரவு தூக்கத்தின் போது இறந்த செல்கள் வெளியேறி, புது செல்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். மேலும் புது செல்கள் உண்டாக நல்ல உறக்கமும் வேண்டும் அல்லவா..?

2. சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்து விட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி. சூரிய வெப்பத்தில் இருந்து நம்முடைய சருமத்தை பாதுகாத்து கொள்ள விட்டமின் ஏ மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் சருமத்திற்கு மிக முக்கியமான கொலாஜன் உருவாவதற்கு விட்டமின் c மிக முக்கியம். விட்டமின் சி ஆண்டி ஆக்ஸிடென்டாக செயல்பட்டு சருமத்தை பாதுகாத்து கொள்கிறது.

3. ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிப்பது மிகவும் நல்லது. அப்போது தான் உடலில் உள்ள டாக்ஸின்கள் வெளியேறி நம்முடைய சருமம் பளபளப்பாக காணப்படும்.

4. மேக்கப் போட்டு விட்டு வெளியில் சென்று மீண்டும் வீடு திரும்பிய பின் உடனடியாக மேக்கப்பை அகற்ற வேண்டும். அதிலும் நேச்சுரலாக இயற்கையாகக் கிடைக்கக்கூடிய எண்ணெய் மற்றும் இயற்கையாகவே மேக்கப்பை அகற்றுவது நல்லது. 

5. அடுத்ததாக ஐஸ்: முகப்பரு வராமல் இருப்பதற்காக ஐஸ் கட்டியை பயன்படுத்தினால், பிம்பில்ஸ் தொல்லையே இருக்காது. மேற்குறிப்பிட்ட விஷயங்களைத்தான் நடிகை ஆலியா பட் மேற்கொண்டு வருகிறாராம். இவருடைய அழகின் ரகசியம் இதுதானாம்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

புத்தாண்டை தொடங்க 'சாணக்கியர்' சொல்லும் சிறந்த வழி
புத்திசாலிகளின் குணங்கள் இதுதான் - சாணக்கியர்