புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 3400.. கையில் சிக்கியவர்கள் 843.. மீதம் எங்கே.?

By Thiraviaraj RMFirst Published Mar 28, 2020, 9:42 PM IST
Highlights

புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்து 400 பேர்.ஆனால் 843 பேர் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.இதனால், மாவட்ட நிர்வாகம் அதிர்ச்சியடைந்திருக்கிறது.

T.Balamurukan
புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்து 400 பேர்.ஆனால் 843 பேர் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.இதனால், மாவட்ட நிர்வாகம் அதிர்ச்சியடைந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.இதுவரைக்கும் 42 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருந்தனர்.கடைகள், பெட்ரோல்பங்க்கள் எல்லாம் காலை 6மணி முதல் மதியம்2.30 மணி வரைக்குமே திறந்திருக்க வேண்டும் என்று அரசு உத்தரவு போட்டிருக்கிறது.

தமிழகத்தில் பெருமளவில், வெளிநாடுகளில் இருந்து திரும்பி வந்தவர்களாலேயே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.  இதனால் நோய் பரவல் முதல் கட்டத்தில் உள்ளது என தமிழக அரசு தெரிவித்து உள்ளது.இதுவரைக்கும் சமூக பரவல் ஏற்படவில்லை.இதனால் தமிழக மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார்கள்.


இந்த நிலையில்,புதுக்கோட்டையில் வெளிநாட்டுக்கு சென்று விட்டு திரும்பி வந்தவர்கள் என கூறி 843 பேரை தனிமைப்படுத்தியிருக்கிறது மாவட்ட நிர்வாகம்.இவர்கள் அனைவரும் சுகாதாரக்குழுவின் கண்காணிப்பில் இருக்கிறார்கள். இந்த மாவட்டத்திற்கு வெளிநாட்டில் இருந்து வந்தவர்களின் பட்டியலை விமான நிலைய அதிகாரிகள் கொடுத்த தகவலால் மாவட்ட நிர்வாகம் அதிர்ச்சி அடைந்து இருக்கிறது.  அதன்படி, வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்து 400 என தெரிய வந்துள்ளது.  இதனால், மீதம் உள்ளவர்களை தேடும் பணியில் மாவட்ட நிர்வாகம் போலீஸ்,கிராம நிர்வாக அதிகாரிகள்,தன்னார்வ அமைப்புகள்,இளைஞர் அமைப்புகள்,மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் அவர்களை கண்டுபிடிக்கும் பணியை தீவிரப்படுத்தியிருக்கிறது புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மாவட்டத்தில் இப்படியொரு கொடுமையா? இவர் எப்படி தமிழகத்தை காப்பாற்றுவார் என்று கமெண்ட் அடிக்க ஆரம்பித்திருக்கிறார் அந்த ஊர்வாசிகள்.

click me!