
தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் கொரோனா தொற்றின் தாக்கம் வேகமாக பரவி வருகிறது. கடந்த ஆண்டைப்போலவே, நடப்பாண்டு மார்ச் மாதத்திலும் கொரோனா தொற்றின் வேகம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.கொரோனா போய்விட்டது என்ற எண்ணத்தில் மக்கள் முகக்கவசம் அணியாமல் செல்வதும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காததும் தான். மக்கள் கூட்டம் கூட்டமாக கூடுகின்றனர். மேலும் அரசு விதிகளை அலட்சியம் செய்யும் மக்களின் மனநிலையே தொற்றை அதிகரிக்க காரணம் என இரு மாநில சுகாதாரத்துறை செயலாளர்களும் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இன்று புதுச்சேரி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் 519 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 47 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40, 433 ஆக உயர்ந்துள்ளது.
இதில் மருத்துவமனைகளில் 200 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 212 பேரும் என 412 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதையொட்டி, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 676 ஆக அதிகரித்துள்ளது. இன்று 29 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 345 ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டுமென புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.